PulseNews
லைஃப் ஸ்டைல்

ஆட்டோ, கேப் டிரைவர்களை அச்சுறுத்தும் திடீர் மாரடைப்பு - மருத்துவர்கள் சொல்வது என்ன?

சமீபத்தில் சுகாதார கல்வியாளர் பிரசாந்த் தேசாய், "கர்நாடகாவின் ஒரு மாவட்டத்தில் நடந்த 20 திடீர் மாரடைப்பு மரணங்களில் 6 மரணங்கள் ஆட்டோ அல்லது கேப் ஓட்டுநர்களுக்கு நிகழ்ந்துள்ளது" என்று கவலையளிக்கும் ஒரு தகவலைத் தனது சமூக வலைத்தளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஆராயப்பட்ட 24 மரணங்களில் 14 மரணங்கள் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு நேர்ந்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். பண ஆசையால் நடந்த விபரீதம்... தாத்தாவை கொலை செய்ய நண்பர்களை ஏவிய பேத்தி; விசாரணையில் வெளியான உண்மை நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, மாசுபாடு, சீரற்ற தூக்கம் மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் உள்ளிட்ட ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார்ந்த அழுத்தங்களை தேசாய் சுட்டிக்காட்டினார். தங்களது பணி நேரத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்யும் மற்ற தொழில் வல்லுநர்களைப் போலல்லாமல், ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை ஈட்டச் சாலையில் அதிக நேரத்தைச் செலவிடுவதையே நம்பியிருக்கிறார்கள். நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்களுக்குத் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள், கட்டாய இடைவேளைகள் மற்றும் போதுமான தூக்கம் போன்ற தேவை என்பதையும் வலியுறுத்தினார். தானேவில் உள்ள கிம்ஸ் 'KIMS' மருத்துவமனையின் கார்டியாக் சயின்சஸ் துறைத் தலைவரும் இயக்குநருமான டாக்டர் பி.சி கல்மத் கூறுகையில், நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது இதய நோய்களுக்கான முக்கிய அபாயக் காரணிகளுக்கு வழிவகுக்கும் என்றார். நீண்ட நேரம் அமர்ந்திருப்பது இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது? ஸ்டீயரிங் சக்கரத்திற்குப் பின்னால் 10-12 மணி நேரம் அமர்ந்து செலவிடுவது என்பது, வேலை நேரத்தில் மிகக் குறைந்த உடற்பயிற்சியையே குறிக்கிறது. காலப்போக்கில், இந்த உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்தின் பல காரணிகளைப் பாதிக்கலாம். வாகனம் ஓட்டுவது தொடர்ச்சியான மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும். போக்குவரத்து நெரிசல், குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய கட்டாயம், பயணிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நிதிசார்ந்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை ஓட்டுநர்களைத் தொடர்ச்சியான பதற்ற நிலையில் வைத்திருக்கக்கூடும். டாக்டர் கல்மத்தின் கூற்றுப்படி, இக்காரணிகள் கரோனரி தமனி நோய் மற்றும் பிற இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இருப்பினும், ஒரு திடீர் மாரடைப்பிற்கு நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதை மட்டுமே நேரடி காரணமாக சொல்லிவிட முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். போதிய தூக்கமின்மையும் மாசுபாடும் இதய சுமையை அதிகரிக்கும் "தூக்கமின்மை அல்லது சீரற்ற முறையில் தூங்குவது அதிக ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களின் அதிகரிப்பிற்கு வழிவகுக்கும், மேலும் இது உடலின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று டாக்டர் கல்மத் கூறுகிறார். குறிப்பாகத் தங்களது வேலை நேரத்தின் பெரும்பகுதியைப் போக்குவரத்தில் செலவிடும் ஓட்டுநர்களுக்குக் காற்று மாசுபாடு மற்றொரு கவலையாகும். நீண்ட காலத்திற்கு மாசுபாட்டை எதிர்கொள்வது வீக்கத்தை உண்டாக்கி, ரத்த நாளங்களைச் சேதப்படுத்தும். புகைபிடித்தல் இதய நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது, அதே வேளையில் அதிகப்படியான மது அருந்துவது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்புக்கு வழிவகுக்கும். 45 வயதிற்குட்பட்டவர் என்பதால் உங்களுக்கு அபாயம் இல்லை என்று அர்த்தமல்ல. "வயதைக் காரணம் காட்டி யாரும் போலியான பாதுகாப்பு உணர்வுக்குள் செல்லக்கூடாது" என்று டாக்டர் கல்மத் கூறுகிறார். ஓட்டுநர்கள் பின்வரும் அறிகுறிகளில் கவனம் செலுத்த வேண்டும் நெஞ்சு அழுத்தம் அல்லது அசௌகரியம் மூச்சுத்திணறல் வழக்கத்திற்கு மாறான வியர்வை மயக்கம் அல்லது தலைச்சுற்றல் படபடப்பு விவரிக்க முடியாத சோர்வு கை, தோள்பட்டை, முதுகு அல்லது தாடைக்குக் பரவும் வலி உடற்பயிற்சியின் போதோ அல்லது வாகனம் ஓட்டும் போதோ இந்த அறிகுறிகள் தோன்றினால் அவை மிகவும் கவலைக்குரியவை. "புதிய, கடுமையான அல்லது தொடர்ச்சியான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனை தேவை" என்று டாக்டர் கல்மத் வலியுறுத்தி உள்ளார். மூச்சுத்திணறல், வியர்வை அல்லது மயக்கத்துடன் நெஞ்சு அசௌகரியம் ஏற்பட்டால், அந்த நபர் தானே வாகனம் ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல முயற்சிக்கக்கூடாது. நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க முடியாது என்றால் ஓட்டுநர்கள் என்ன செய்யலாம்? நடக்க, உடலை நீட்ட மற்றும் கால்களை அசைக்க ஒவ்வொரு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிய இடைவேளை எடுக்க டாக்டர் கல்மத் பரிந்துரைக்கிறார். "முதலில் செய்ய வேண்டியது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் இருப்பதுதான்," என்கிறார் அவர். வேலை நேரத்தைத் தவிர்த்து வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். ஓட்டுநர்கள் தங்களது உடல்தகுதி மற்றும் மருத்துவ நிலையைக் பொறுத்து, விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது பிற ஏரோபிக் பயிற்சிகளைத் தசைப் பயிற்சிகளுடன் சேர்த்துச் செய்யலாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆட்டோ, கேப் டிரைவர்களை அச்சுறுத்தும் திடீர் மாரடைப்பு - மருத்துவர்கள் சொல்வது என்ன?
PulseNews சுருக்கம்

கர்நாடகாவின் ஒரு மாவட்டத்தில் நிகழ்ந்த 20 திடீர் மாரடைப்பு மரணங்களில், 6 பேர் ஆட்டோ மற்றும் கேப் ஓட்டுநர்கள் என்று சுகாதார கல்வியாளர் பிரசாந்த் தேசாய் கவலை தெரிவித்துள்ளார். சமூக வலைதளப் பதிவு ஒன்றில் அவர் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

ஆராயப்பட்ட 24 மரணங்களில் 14 மரணங்கள் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கே நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய திடீர் மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle