கேரள ஜோதிட இரகசியங்கள்! (பாகம்-2) -லால்குடி கோபாலகிருஷ்ணன்(16) -லால்குடி கோபால கிருஷ்ணன்
வி ரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு என்பதே விதியின் கட்டளை. சிலருக்கு விரும்பியது கிடைக்காமல் போவதால், கிடைத்ததை விரும்பும் துன்ப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மனோகாரகனாகிய சந்திரன் நிற்கும் ராசிக்கும், அதன் மூன்றாம் வீட்டிற்குமுள்ள தொடர்பே விருப்பம் நிறைவேறு தலைக்காட்டும் மூன்றாம் வீடும், அதன் பதினோராம் வீடும் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் நிலைப்பாடு. பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் கேள்விக்குறிகளும், கவலையின் ரேகைகளும், நிரம்பியிருந்தன. தான் கனவு கண்ட வாழ்க்கை, தனக்கு வாய்க்காமல் போன கவலையைப் பகிர்ந்துக்கொண்டார். அதன் காரணத்தையறியவே, பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித் தார். கண்ணம்புழா பகவதி அம்மனைத்தொழுது, பிரசன்னத்தைத் தொடங்கினார். சர ராசியில் சோழி லக்னமும், சந்திரனும் அமைந்தது. பதினோராம் வீடு பாதகமானது. சந்திரனுக்கு, ஏழாம் வீட்டில் அமர்ந்த சனியின் பார்வையும் விரக்தியையும், ஆசை நிறை வேறாமல் போனதைக் காட்டியது. திரிதியை, தசமி, பௌர்ணமியில் நவ ஆவரண பூஜை செய்தால், தோஷங்கள் நீங்கி, விருப்பம் நிறைவேறும் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலன் தந்தது. வெற்றியின் வெளிச்சம் புலப்பட்டது. வென்றது. கேரள ஜோதிடத்தின் சிறப்பு வேதத்தின் அங்கமாகிய இசையில், ஏழு ஸ்வரங்களும், பனிரெண்டு ஸ்வரஸ்தானங்களும் அமைந்து, அதில் ஷட்ஜம், பஞ்சமம் தவிர்த்து மற்ற ஐந்து ஸ்வரங்களிலும் கோமளம் தீவிரம் எனும் இரண்டு நிலைகள் உள்ளதைக் காணலாம். அதேபோல், ஜோதிடத்திலும் ஆட்சி வீடுகளையுடைய, ஏழு கிரகங்களில் சூரியன், சந்திரன் தவிர்த்து மற்ற கிரகங்களுக்கு ஆரோகண, அவரோகண கதிகளுண்டு. ஒரு கிரகத்தின் உச்ச கதிக்கு அருகில் உள்ள வீட்டை ஆரோகண ஆட்சி வீடு என்றும், நீச கதிக்கு அருகிலுள்ள வீட்டை அவரோகண ஆட்சி வீடு என்றும் பகுத்து பலன் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒரு ராசியின் ஒன்று, ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகள், ஆரோகண ஆட்சி வீடாக அமைந்தால், அந்த வீட்டின் அதிபதியால் நன்மை பெருகும். உதாரணத்திற்கு- கடக ராசிக்கு, ஐந்தாம் வீடு விருச்சிகம், செவ்வாயின் ஆரோகண ஆட்சி வீடு. ஒன்பதாம் வீடாகிய மீனம் குருவின் ஆரோகண ஆட்சி வீடு, அதனால் கடக ராசிக்கு குருவும், செவ்வாயும், யோக காரகர்களாக அமைகிறார் களென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து. வீடு கட்டுவதில் தடை நீங்குமா? கேள்வி: என் மூதாதையர் நிலத்தில் வீடு கட்ட முயற்சி செய்து வருகிறேன். ஆனாலும், பல தடைகளால் என் விருப்பம் நிறைவேறவில்லை. தடை நீங்குமா? எண்- 19, மிருகசிரிடம்- 3, நட்சத்திராதிபதி- செவ்வாய், ராசியாதிபதி- புதன். ப் சோழி லக்னத்தின் நான்காமிடத்தில் பிரசன்ன லக்னம் அமைவது, வீடு கட்டுதல் தொடர்பான கேள்வியைக் குறிக்கிறது. ப் நான்காமிடத்து அதிபதியாகிய புதன், மூன்றாமிடத்தில், அமைவது தடையைக் காட்டுகிறது. ப் நான்காமிடத்தை சனிபகவான் பார்ப்பதால் கடுமையான தடை உள்ளது. ப் ஒன்பதாம் அதிபதி பத்தில் இருப்பதால், பித்ரு தோஷம் கடுமையாக உள்ளது. பரிகாரம் செய்வது நல்லது. ப் ஒன்பதில் ராகு இருப்பது, பித்ரு தோஷத்தால் ஏற்படும் தடையைக் காட்டுகிறது. பரிகாரம் ப் அமாவாசை நாட்களில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி வெல்லம், எள்ளு இவற்றை கலந்து கொடுக்கவேண்டும். இதனால் பித்ரு தோஷத்தினால் வரும் பாதிப்பு குறையும். *வீடு கட்டும்போது தடை ஏற்படாமல் இருக்க வீடு கட்ட வாங்கிய கட்டுமான கற்களில் ஒன்றை எடுத்து அந்த ஊர் எல்லை தெய்வத்தின் கோவிலில் பூஜை செய்யவேண்டும். அந்த கல்லை அஸ்திவாரத்தின் ஈசானிய மூலையில் போட்டு மூடி கட்டடம் கட்டினால், எவ்வித தடைகளுமின்றி, விருப்பம் முழுமையாக நிறைவேறும்.

தமக்கு விருப்பமானவை கிடைக்காதபோது, கிடைத்ததை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டிய சூழலுக்குப் பலரும் தள்ளப்படுகிறார்கள். இதுவே விதியின் கட்டளையாகவும் அமைகிறது.
ஜோதிட ரீதியாக, மனோகாரகனான சந்திரன் அமர்ந்த ராசிக்கும் அதன் மூன்றாம் வீட்டிற்கும் இடையிலான தொடர்பே ஒருவரது விருப்பம் நிறைவேறுவதை தீர்மானிக்கிறது. மூன்றாம் வீடும், அதன் பதினோராவது வீடும் இணையும்போது வெற்றி உறுதி என்று கிருஷ்ணன் நம்பூதிரி கூறுகிறார்.