PulseNews
லைஃப் ஸ்டைல்

அப்பாவின் பிறந்த நாள்; அம்மாவிடம் ராகுல்காந்தி உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கந்தியின் பிறந்தநாளை (20-08-26) முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் அவரது மனைவி சோனியா காந்தி மற்றும் அவரது மகனும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி உட்படக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, ராகுல்காந்தி தனது சமூக வலைத்தளப்பக்கதில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்பா நம்மை விட்டுச் சென்ற நாளிலிருந்து, வாழ்க்கை உங்கள் முன் நிறுத்திய சவால்கள் அனைத்தையும் நீங்கள் எத்தகைய அளப்பரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும் எதிர்கொண்டீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் எத்தகைய சூழல்களைக் கடந்து வந்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிந்தைய உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பிரியங்காவும் நானும் மட்டுமே முழுமையாக அறிவோம். உங்களை நேசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், உங்கள் கதையான ”பிலாங்கிங்; ஏ ஜர்னே ஆஃப் லவ்” - ஐ வாசிக்கப்போகிறார்கள் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இயல்பிலேயே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பாத ஒருவரான நீங்கள், உங்கள் அழகான கதையை உலகிற்குச் சொல்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். இன்று, அவருடைய பிறந்தநாளில், அப்பா புன்னகைத்தபடியே, பெருமையுடன் தன் அழகான சோனியாவைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அப்பாவின் பிறந்த நாள்; அம்மாவிடம் ராகுல்காந்தி உருக்கம்
PulseNews சுருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்களையும் தனது தந்தையையும் ஒன்றாகக் கண்டு 35 ஆண்டுகள் கடந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle