திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் பொது மற்றும் சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சிரமமின்றி தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விடுமுறை நாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்வதை உறுதி செய்யவும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் உரிய பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.