PulseNews
லைஃப் ஸ்டைல்

தரை துடைச்ச பிறகும் கால்ல ஒட்டுதா? இந்த தவறு காரணமாக இருக்கலாம்; இப்படி செஞ்சி பாருங்க

வீட்டை சுத்தமாக வைத்திருக்க தரையைத் தொடர்ந்து துடைப்பது வழக்கம். ஆனால், தரையைத் துடைத்த பிறகும் காலில் ஒட்டுவது போல அல்லது பிசுபிசுப்பாக இருப்பதை பலரும் எதிர்கொள்கின்றனர். தரையில் அழுக்கு இருப்பதால்தான் இப்படி இருக்கிறது என்று நினைத்தாலும், பெரும்பாலும் அதிகப்படியான சோப்பு அல்லது ஃப்ளோர் கிளீனர் எச்சங்கள் தரையில் படிவதே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. சரியான அளவில் க்ளீனர் பயன்படுத்தாமல் இருப்பது முதல் அழுக்கு மாப் நீரை தொடர்ந்து பயன்படுத்துவது வரை பல காரணங்கள் தரையை ஒட்டும் தன்மையுடன் மாற்றலாம். அதிகமாக க்ளீனர் பயன்படுத்துவது தரை நன்றாக சுத்தமாக வேண்டும் என்பதற்காக அதிக அளவு ஃப்ளோர் கிளீனரை தண்ணீரில் கலப்பது சில நேரங்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். க்ளீனர் அதிகமாக இருந்தால், அதை முழுமையாக அகற்ற முடியாமல் தரையின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய படலம் போல தங்கி விடும். இதனால் தரை சுத்தமாக இருந்தாலும், காலில் ஒட்டுவது போல உணரலாம். எனவே, க்ளீனர் பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அழுக்கு மாப் நீரை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் ஒரே வாளி தண்ணீரை நீண்ட நேரம் பயன்படுத்தி வீடு முழுவதையும் துடைப்பதும் தரை பிசுபிசுப்பதற்கான மற்றொரு காரணமாகும். தரையில் இருக்கும் தூசி, எண்ணெய், அழுக்கு போன்றவை தண்ணீரில் கலந்த பிறகு, அதே நீரில் மாப்பை மீண்டும் மீண்டும் நனைத்தால் அந்த அழுக்கு மீண்டும் தரையில் படிய வாய்ப்புள்ளது. குறிப்பாக சமையலறை மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் மாப் நீரை தேவையான நேரங்களில் மாற்றுவது முக்கியம். சோப்பு போட்ட பிறகு ‘ரின்ஸ்’ செய்யுங்கள் க்ளீனர் கலந்த தண்ணீரால் தரையைத் துடைத்துவிட்டு அப்படியே விட்டுவிடுவதால் சோப்பு எச்சம் தரையில் தங்கலாம். இதைத் தவிர்க்க, க்ளீனர் பயன்படுத்திய பிறகு சுத்தமான தண்ணீரில் நனைத்த மாப்பைக் கொண்டு தரையை மீண்டும் ஒருமுறை துடைப்பது உதவும். குறிப்பாக டைல்ஸ் போன்ற மென்மையான மேற்பரப்புகளில் இந்த இரண்டாவது சுற்று துடைப்பு பிசுபிசுப்பை குறைக்க உதவும். வெதுவெதுப்பான தண்ணீர் உதவலாம் தரையில் க்ளீனர் எச்சம் அதிகமாக இருப்பதாகத் தெரிந்தால், முதலில் லேசான வெதுவெதுப்பான தண்ணீரை மட்டும் பயன்படுத்தி தரையைத் துடைக்கலாம். இது மேற்பரப்பில் இருக்கும் சில சோப்பு எச்சங்களை தளர்த்தி அகற்ற உதவும். அதன் பிறகு சுத்தமான மாப்பால் மீண்டும் துடைத்து, தரையை நன்றாக உலர விடுவது நல்லது. வினிகர் பயன்படுத்தும் முன் தரையை கவனியுங்கள் சில டைல்ஸ் அல்லது கடினமான தரைகளில் நீர்த்த வெள்ளை வினிகர் சோப்பு எச்சங்களை அகற்ற உதவலாம். ஆனால் அனைத்து தரை வகைகளுக்கும் வினிகர் பொருத்தமானது அல்ல. குறிப்பாக இயற்கைக் கல், மார்பிள், கிரானைட் போன்ற அமிலத்தால் பாதிக்கக்கூடிய மேற்பரப்புகளில் வினிகரை பயன்படுத்தக் கூடாது. எனவே, தரையின் வகையைப் பொறுத்து தயாரிப்பாளரின் பரிந்துரையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது. மாப்பையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் சில நேரங்களில் பிரச்சினை தரையில் அல்ல, மாப்பிலேயே இருக்கலாம். அழுக்கு மற்றும் சோப்பு எச்சம் படிந்த மாப்பை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், தரையை சுத்தம் செய்வதற்குப் பதிலாக அழுக்கை பரப்பும் நிலை ஏற்படும். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் மாப்பை நன்றாக அலசி, தண்ணீரை பிழிந்து உலர்த்துவது அவசியம். துர்நாற்றம் அல்லது எண்ணெய்ப்பசை அதிகமாக இருந்தால், மாப்பை முறையாக சுத்தம் செய்வதுடன் அவ்வப்போது மாற்றுவதும் நல்லது. சமையலறை தரையில் கூடுதல் கவனம் சமையலறை தரையில் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் நுண்ணிய எச்சங்கள் இருப்பதால், சாதாரண சோப்பு நீரால் துடைத்தாலும் சில நேரங்களில் வழுவழுப்பாகவோ ஒட்டுவது போலவோ இருக்கலாம். இங்கு அதிக க்ளீனர் சேர்ப்பதைவிட, முதலில் கசிவுகள் மற்றும் எண்ணெய்ப்பசையை அகற்றி, பின்னர் சரியான அளவு கிளீனருடன் துடைத்து, இறுதியாக சுத்தமான தண்ணீரால் ரின்ஸ் செய்வது சிறந்தது. தரைக்கு ஏற்ற க்ளீனரையே தேர்வு செய்யுங்கள் ஒவ்வொரு தரை மேற்பரப்புக்கும் ஒரே வகையான கிளீனர் பொருத்தமானதாக இருக்காது. டைல்ஸ், மார்பிள், மரத்தளம், லேமினேட் உள்ளிட்டவற்றுக்கு வெவ்வேறு பராமரிப்பு முறைகள் தேவைப்படலாம். தரையின் தன்மைக்கு பொருந்தாத ரசாயனங்களைப் பயன்படுத்துவது எச்சம் தங்குவதோடு மட்டுமல்லாமல், சில மேற்பரப்புகளில் சேதத்தையும் ஏற்படுத்தலாம். எனவே, தரை வகைக்கு ஏற்ற தயாரிப்பைத் தேர்வு செய்வது முக்கியம். தரை பிசுபிசுப்பாகாமல் இருக்க என்ன செய்யலாம்? தரையை துடைக்கும்போது குறைந்த அளவு க்ளீனர் + சரியான அளவு தண்ணீர் என்ற முறையைப் பின்பற்றுங்கள். மாப் நீர் அதிகமாக அழுக்காகும் முன்பே அதை மாற்றுங்கள். க்ளீனர் பயன்படுத்திய பிறகு தேவையான இடங்களில் சுத்தமான தண்ணீரால் மீண்டும் துடைக்கவும். மாப்பை ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் நன்றாகக் கழுவி உலர்த்துங்கள். மேலும், புதிதாகப் பயன்படுத்தும் எந்த கிளீனரையும் முழு தரையிலும் பயன்படுத்துவதற்கு முன்பு, சிறிய பகுதியில் சோதித்துப் பார்ப்பது பாதுகாப்பானது. முக்கியமாக, தரையை சுத்தமாக்க அதிக க்ளீனர் தேவை என்றில்லை. சரியான அளவு கிளீனர், சுத்தமான மாப் நீர் மற்றும் இறுதியில் சுத்தமான தண்ணீரால் ஒரு முறை துடைப்பது போன்ற எளிய பழக்கங்களே தரையை சுத்தமாகவும் பிசுபிசுப்பின்றியும் வைத்திருக்க உதவும்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தரை துடைச்ச பிறகும் கால்ல ஒட்டுதா? இந்த தவறு காரணமாக இருக்கலாம்; இப்படி செஞ்சி பாருங்க
PulseNews சுருக்கம்

வீட்டை சுத்தமாக பராமரிக்க தரையைத் துடைக்கும்போது, சிலருக்கு தரை பிசுபிசுப்பாகவோ அல்லது காலில் ஒட்டுவது போன்றோ உணர்வு ஏற்படுவதுண்டு. அழுக்குதான் காரணம் என்று பலர் கருதினாலும், உண்மையில் பயன்படுத்தும் தரை துப்புரவு திரவம் அல்லது சோப்பின் அளவு அதிகமாக இருப்பதே இந்த சிக்கலுக்கு முக்கிய காரணமாகும்.

மேலும், அழுக்கான மாப் நீரை மீண்டும் பயன்படுத்துவதும் தரை ஒட்டும் தன்மையுடன் இருக்க வழிவகுக்கிறது. எனவே, க்ளீனரை சரியான அளவில் கலந்து பயன்படுத்துவதன் மூலம் தரையை பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க முடியும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle