ரஜினியின் ’தர்மன்’... அப்டேட் கொடுத்த படக்குழு..!
’தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியதாகப் படக்குழு அறிவித்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தர்மன்’. ’ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அஷ்வத் மாரிமுத்து, இப்படத்தை இயக்கி வருகிறார். ரஜினி மருத்துவராக நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிர செய்திருந்தது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியதை உறுதி செய்து, படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிக்கே உரித்தான ஸ்டைலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.