PulseNews
சினிமா

'உங்க ஸ்மைல் க்யூட்டா இருக்கு...' விஜயை புகழ்ந்த இந்த சிறுமி இப்போ பிரபல பாடகி: சச்சின் படம் ஞாபகம் இருக்கா?

தமிழக அரசியலில் விஜய் முதல்வர் ஆகிவிட்ட நிலையில், அவருடன் இணைந்து நடித்த பலரும் தங்கள் அனுபவங்களை நேர்காணல்கள் மூலமாகவும், சமூகவலைதளங்கள் மூலமாகவும் கூறி வருகின்றனர் அந்த வகையில் சச்சின் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரம் ப்ரீத்தி தற்போது பாடகராக மாறியுள்ளார். இது குறித்து அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சச்சின் . ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற சந்திரமுகி படத்துடன் மோதிய சச்சின் படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும், அந்தப் படத்தின் சில காட்சிகள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம்பிடித்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒரு காட்சி, ஒரு சிறுமி விஜயிடம் “உங்க ஸ்மைல் க்யூட்டா இருக்கு” என்று கூறும் காட்சியாகும். படத்தில் பிரீத்தி என்ற கேரக்டரில் நடித்த அந்த சிறுமிதான், 21 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். அப்போது தனது அழகான முகத்தாலும் குழந்தைத்தனமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பிரீதி, தற்போது வளர்ந்து பாடகியாக மாறியுள்ளார். ஷர்மி என்ற பெயரில் இருக்கும் இவர், இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக உள்ளார். 14.4 ஆயிரம் ஃபாலோயர்களைக் கொண்ட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஷர்மி தற்போது மீண்டும் ரசிகர்களை ‘சச்சின்’ பட நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். ‘சச்சின்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பழைய காட்சியை, அதே உடை மற்றும் தோற்றத்துடன் மீண்டும் உருவாக்கி ஷர்மி புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே கேரக்டரையும் காட்சியையும் மீண்டும் நடித்துள்ள அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றதால், பிரீதி கேரக்டரும் ஷர்மியும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளனர். அப்போது நடித்த குட்டி பிரீதியையும், இன்றைய ஷர்மியையும் ஒரே காட்சியில் பார்க்க முடிந்தது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த 21 ஆண்டுகளில் விஜயின் வாழ்க்கையிலும் ஷர்மியின் வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். View this post on Instagram A post shared by Preethi (@preethiplease) தற்போதைய அரசியல் பின்னணியையும் இணைத்து, சமூக வலைதளங்களில் சில பதிவுகள் இந்தப் பழைய காட்சியை மீண்டும் வைரலாக்கி வருகின்றன. “21 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் முதலமைச்சராகிவிட்டார்; பிரீதி பாடகியாகிவிட்டார்” என்ற வகையிலான பதிவுகள் இன்ஸ்டாகிராமில் பரவி வருகின்றன. 2005ஆம் ஆண்டு வெளியான ‘சச்சின்’ திரைப்படம் இன்றளவும் விஜய் ரசிகர்களின் விருப்பமான படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தில் விஜய்–ஜெனிலியா ஜோடிக்கும், திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான காட்சிகளுக்கும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த அந்தக் குழந்தை நட்சத்திரத்தை 21 ஆண்டுகளுக்குப் பிறகு அதே காட்சியின் மூலம் மீண்டும் பார்க்க முடிந்ததுதான் தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'உங்க ஸ்மைல் க்யூட்டா இருக்கு...' விஜயை புகழ்ந்த இந்த சிறுமி இப்போ பிரபல பாடகி: சச்சின் படம் ஞாபகம் இருக்கா?
PulseNews சுருக்கம்

2005-ம் ஆண்டு வெளியான 'சச்சின்' திரைப்படத்தில் விஜயிடம் "உங்க ஸ்மைல் க்யூட்டா இருக்கு" என்று கூறி புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் ப்ரீத்தி, தற்போது ஷர்மி என்ற பெயரில் பாடகராக மாறியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்தப் பழைய காட்சியை அதே தோற்றத்தில் மீண்டும் நடித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் அரசியலில் இணைந்துள்ள நிலையில், அந்தச் சிறுமி பாடகியாக உயர்ந்துள்ளதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். 14.4 ஆயிரம் பின்தொடர்பவர்களைக் கொண்ட தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் அவர் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema