‘டாக்ஸிக்’ படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம்; யூடியூபர்களுக்கு படக்குழு நோட்டிஸ்!
'கே.ஜி.எஃப் 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 4 வருட இடைவெளிக்குப் பிறகு யஷ் நடிப்பில் கடந்த 26ஆம் தேதி வெளியான படம் ‘டாக்ஸிக்’. இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியிருக்க நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த மூன்று பேரும் பாடல்களை கவனித்திருக்க பின்னணியை இசையை மட்டும் ரவி பஸ்ரூர் கவனித்திருக்கிறார். இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என இன்னும் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்தது.யஷ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக ஓவர் பில்டப், அதீத வன்முறை மற்றும் அதிக பாலியல் காட்சிகள் என கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இருப்பினும் முதல் நாளில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த நிலையில் படத்தை விமர்சனம் செய்த சில யூடியூபர்கள் மற்றும் எக்ஸ் தள பயணர்களுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நோட்டிஸ் சென்றுள்ளது. இது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கடந்த 22ஆம் தேதி பெங்களூரு கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில் படத்தை பற்றி பொய்யான, தவறான நோக்கத்தோடு மற்றும் இழிவான கருத்துகளை வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த நோட்டிஸ் சென்றுள்ளது. ஆனால் எதிர்மறையான விமர்சனங்கள் அல்லது திறனாய்வுகளையோ இந்த உத்தரவு வெளிப்படையாகத் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு, 4 ஆண்டுகள் இடைவெளி விட்டு யஷ் நடிப்பில் கடந்த 26ஆம் தேதி 'டாக்ஸிக்' படம் வெளியானது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் விமர்சனம் செய்த யூடியூபர்களுக்குப் படக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.