Vinayakan: மோசமான நடத்தை.. பிரிந்து போன மனைவி.. வேதனையுடன் பேசிய ரஜினி பட வில்லன்!

பிரபல மலையாள நடிகர் விநாயகன் ஒரு நேர்காணலில் தன்னுடைய 40 வருட மண வாழ்க்கை முறிந்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.

தமிழ், மலையாளத்தில் கலக்கும் வில்லன்

தமிழில் திமிரு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விநாயகன். இவர் எல்லாம் அவன் செயல், சிலம்பாட்டம், காளை, மரியான், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2023ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தன் மூலம் பட்டித்தொட்டியெங்கும் விநாயகன் புகழ் பரவியது. மலையாளத்திலும் தனக்கென தனியிடம் பிடித்த அவர், கடந்த சில ஆண்டுகளாகவே கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சறுக்கலை உண்டாக்கியுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய விநாயகன்

2022ம் ஆண்டு மீ டூ இயக்கம் பற்றி விநாயகன் சர்ச்சையாக பேசினார். தொடர்ந்து கேரளம் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவின்போது யார் இவர் என கேட்டு அதிர வைத்தார். தொடர்ந்து ஹைதரபாத் விமான நிலையத்தில் மதுபோதையில் பாதுகாப்புப்படை அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தார். தனது அண்டை வீட்டாருடன் சண்டையின்போது அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். இப்படி சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற விநாயகன் தனது மனைவியின் பிரிவால் நொறுங்கி போயுள்ளார்.

மனைவியுடனான சந்திப்பும்.. சண்டையும்

ஒரு நேர்காணலில் பேசிய அவர், “எனக்கு 19 வயதாக இருக்கும்போது நான் என் மனைவி பபிதாவை முதல்முறையாக சந்தித்தேன். மகாராஜா கல்லூரியில் இந்த சந்திப்பு தொடங்கியது. இது ஒரு காதல் திருமணமாகும். நாங்கள் இருவரும் 40 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோன். அவள் திடீரென்று பிரிந்து சென்று விட்டாள். எங்கள் இருவரிடையேயும் எந்த சண்டையும் இல்லை. சேர்ந்து வாழ முடியாததால் தான் பிரிந்தோம். வாழ்க்கையில் நாம் குறைந்தபட்சம் ஒருவரிடமாவது மனம் திறந்து பேசுவோம்.

அப்படிப்பட்ட நபராக தான் பபிதா இருந்தார். இப்போது என் வாழ்க்கையில் அப்படி யாரும் இல்லை. இதனால் என் வாழ்க்கை மிகவும் இருண்டு விட்டது. குறிப்பாகப் பணத்தைக் கையாள்வது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. என்னிடம் ஜிபே போன்ற வசதிகள் கிடையாது. எல்லாவற்றையும் பபிதா தான் கவனித்து வந்தார்.

இந்த பிரிவுக்கு நான் தான் முழு பொறுப்பாகும்.எனது நடத்தை மனைவியின் அமைதி மற்றும் நிம்மதியை பறித்து விட்டது. அவளால்இனிமேலும் சமாளிக்க முடியாததால் பிரிந்து சென்று விட்டார். அது அவரின் தவறு கிடையாது. தொடர்ச்சியான சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை தொடர்வதை விட இந்த பிரிவு நல்லது என உணர்ந்தேன். இன்றும் கூட பபிதா நான் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறாள். எனக்கு ரீசார்ஜ் உள்ளிட்ட விஷயங்களை அவர் தான் செய்கிறார்” என விநாயகன் தெரிவித்துள்ளார். இருவரும் கடந்த 2023ம் ஆண்டு பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது விநாயகன் மனம் திறந்து பேசியுள்ளது மலையாள சினிமாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பிரபல மலையாள நடிகரான விநாயகன், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது 40 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தனது மோசமான நடத்தையே இந்த பிரிவுக்கு காரணம் என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
திமிரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான விநாயகன், எல்லாம் அவன் செயல், மரியான் மற்றும் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து, இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.