PulseNews
சினிமா

முன்னணி இயக்குனர் தயாரிப்பு, தமிழில் அறிமுகம் ஆகும் ஜான்வி கபூர்; இயக்குனர் யார் தெரியுமா?

இந்தி சினிமாவில் வெற்றிப்படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் இதுவரை நடிக்காத நிலையில், தற்போது ஒரு வெப் தொடர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்தியாவின் பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ள இவருக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். அம்மாவை பின் தொடர்ந்து இருவருமே நடிகைகளாக இருக்கும் நிலையில், ஜான்வி கபூர் இந்தி கடந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்துள்ளார். இந்தியில் பல வெற்றிப்படங்களில் நடித்த அவர், கடந்த 2024-ம் ஆண்டு வெளியான தேவாரா பாகம் 1 படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். கொரட்டாலா சிவா இயக்கிய தெலுங்கு படமான இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ராம்சரன் நடிப்பில் வெளியான பெத்தி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு கை கொடுக்காத நிலையில், ஜான்வி கபூர் எப்போது தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்து வந்தது, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ‘குறத்தி’ என்ற பெண் மையக் கதையம்சம் கொண்ட வெப் சீரிஸ் மூலம் ஜான்வி கபூர், தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இயக்குநர் சற்குணம் இந்த தொடரை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து படக்குழுவினர் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்த வெப் சீரிஸ் சில காலமாகவே உருவாக்கப் பணிகளில் இருந்து வருவதாகவும், தற்போது இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல படக்குழுவினர் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. பா. ரஞ்சித் இப்படத்துடன் இணைந்திருப்பதால், ‘குறத்தி’ சமூகப் பின்னணியுடன் கூடிய, பெண்ணை மையமாகக் கொண்ட வலுவான கதைக்களத்தைப் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘குறத்தி’ தமிழ் வெப் சீரிஸ் உறுதி செய்யப்பட்டால், தென்னிந்திய திரையுலகில் ஜான்வி கபூரின் வளர்ந்து வரும் பயணத்தில் இது மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமையக்கூடும்.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முன்னணி இயக்குனர் தயாரிப்பு, தமிழில் அறிமுகம் ஆகும் ஜான்வி கபூர்; இயக்குனர் யார் தெரியுமா?
PulseNews சுருக்கம்

இந்தித் திரையுலகில் பிரபலமான நடிகையான ஜான்வி கபூர், தென்னிந்தியாவில் 'தேவரா' படத்தின் மூலம் அறிமுகமானாலும் இதுவரை நேரடித் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், அவர் ஒரு வெப் தொடரின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், தற்போது இந்தத் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களைச் சந்திக்க உள்ளார். ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றித் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் ஜான்வியின் இந்தத் தமிழ் வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema