PulseNews
சினிமா

Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்ஸிக் படம் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆஃபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையாடியுள்ளது.

டாக்ஸிக் படம்

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டாக்ஸிக்”. இந்த படத்தை பிரபல பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் என 5 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதில் நயன்தாரா யஷ் சகோதரியாக நடித்திருக்கிறார். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

<iframe title="Vijaya Prabhakaran on CM Vijay | CM விஜய் பற்றி எல்லைமீறி பேசிய விஜய பிரபாகரன்! பிரேமலதா ரியாக்‌ஷன்" src="https://www.youtube.com/embed/HId4AKL95KA" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

மோசமான படம் என விமர்சனம்

கேஜிஎஃப் என்ற ஒற்றைப் படம் மூலம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பிய யஷ்க்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படியிருக்கும் நிலையில் டாக்ஸிக் படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காணச் சென்ற அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படம் படுமோசம், என்ன சொல்ல வருகிறார்கள் என புரியவில்லை, இதற்காகவா இத்தனை மாதங்களாக காத்திருந்தோம், நம்ப வச்சி ஏமாத்திட்டாங்க என படம் பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி தவித்து வருகின்றனர்.

இந்த படம் முழுக்க முழுக்க யஷ் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் தான் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுவாக ரசிகர்களை கவரவில்லை என சொல்லப்படுகிறது.

முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஓணம் பண்டிகை மற்றும் மிலாதுன் நபி என விடுமுறை நாட்களில் இப்படம் வெளியானதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்துள்ளது. இப்படம் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.140 கோடி கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் 24,579 காட்சிகள் திரையிடப்பட்ட இப்படம்மொத்தமாக ரூ.120.75 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கன்னடத்தில் எடுக்கப்பட்ட டாக்ஸிக் படம் முதல் நாளில் ரூ.23.30 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் அதனை விட இருமடங்கு இந்தியில் ரூ.55 கோடி வசூலை அள்ளியுள்ளது.

தெலுங்கில் ரூ.16 கோடியும், தமிழில் ரூ.5.50 கோடியும்,மலையாளத்தில் ரூ.1.30 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொழிகளைக் கடந்தும் இப்படம் வசூலை வாரிக் குவித்துள்ளது. வெளிநாட்டு சந்தையிலும் சிறப்பாகச் செயல்பட்டு முதல் நாளில் ரூ.20 கோடி வசூலித்துள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் இப்படம் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனைப் படைக்கும் என நம்பப்படுகிறது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
PulseNews சுருக்கம்

நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்ஸிக்'. நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் ஆகிய ஐந்து முன்னணி நடிகைகள் நடித்துள்ள இப்படம், வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆஃபீஸில் மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது.

படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தபோதிலும், வசூல் ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema