PulseNews
சினிமா

கேப்டன் ஹீரோ, சத்யராஜ் வில்லன்; வெறும் 12 நாள் தான், முழு படமும் தயார்; மணிவண்ணன் இயக்கிய அந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை மற்றும் பரபரப்பான காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படங்களில் முக்கியமானது ‘நூறாவது நாள்’. இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் உருவான தருணம் குறித்து இயக்குனர் மணிவண்ணனின் தங்கை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து 1982-ம் ஆண்டு வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிவண்ணன். அதனைத் தொடர்ந்து இளமை காலங்கள், 24 மணி நேரம், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக மணிவண்ணன், ஸ்கிரப்ட் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன தோன்றுகிறதோ அதையே கதையாக மாற்றி படத்தை வெற்றிப்படமாக மாற்றும் திறன் கொண்டவர். மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படத்தை தொடாமல் இன்றைக்கு எந்த அரசியல் படமும் வெளியாவதில்லை. தனது இயக்கத்தில் காதல், காமெடி, ஆக்ஷன் த்ரில்லர், குடும்பம், ரொமான்ஸ் என பல வெற்றிகளை கொடுத்துள்ள மணிவண்ணன், பொதுவாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு பல வாரங்கள் அல்லது மாதங்கள் தேவைப்படும் நிலையில், ‘நூறாவது நாள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 12 நாட்களில் முடித்துள்ளார். 1984-ம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமான நூறாவது நாள் படத்தில் விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் சத்யராஜூவின் வில்லத்தனம் இன்றைக்கும் பயத்தை கொடுக்கும் அளவுக்கு இருக்கும். இந்த படத்தை 12 நாட்களில் முடித்துள்ளார் மணிவண்ணன். படப்பிடிப்புக்கு முன்பே காட்சிகள், நடிகர்களின் பங்களிப்பு மற்றும் படத்தின் முக்கியமான பகுதிகள் குறித்து தெளிவான திட்டமிடல் இருந்ததால், குறுகிய காலத்திலேயே படத்தை உருவாக்க முடிந்ததாக கூறப்படுகிறது. ஒரு திரைப்படத்தை வெறும் 12 நாட்களில் படமாக்குவது என்பது அக்காலத்திலும் மிகவும் சவாலான விஷயமாகவே இருந்திருக்கும். அதிலும் கதையின் முக்கியத்துவம், காட்சிகளின் தொடர்ச்சி, நடிகர்களின் கால்ஷீட் உள்ளிட்ட பல விஷயங்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்திருக்கும். இன்றைக்கு நூறாவது நாள் திரைப்படம், காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் குறித்து பேசிய மணிவண்ணனின் தங்கை அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒருநாள் என் அண்ணன், எனக்கு ஒரு தாட் தோன்றுகிறது சொல்கிறறேன் கேட்கிறாயா என்று கேட்டார். நானும் சொல்லுங்க என்று சொன்னேன். மொட்டை அடித்த சத்யராஜ் நளினியை கொலை செய்ய துரத்தும் காட்சியை சொன்னார். நான் பயத்தில் கத்திவிட்டேன். அதை பார்த்த அவர் பயமாக இருக்கா? இதை படமாக எடுத்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என்று சொன்னார். படம் ஆரம்பித்துவிட்டால் தூங்கவே மாட்டார். அதனால் தான் இந்த படம் 12 நாட்களில் முடிந்தது என்று கூறியுள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கேப்டன் ஹீரோ, சத்யராஜ் வில்லன்; வெறும் 12 நாள் தான், முழு படமும் தயார்; மணிவண்ணன் இயக்கிய அந்த படம் தெரியுமா?
PulseNews சுருக்கம்

இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான ‘நூறாவது நாள்’ திரைப்படம், த்ரில்லர் பாணியில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜயகாந்த், மோகன், சத்யராஜ் மற்றும் நளினி நடித்த இப்படத்தின் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி மணிவண்ணன் வெறும் 12 நாட்களில் முடித்து சாதனை படைத்தார்.

இப்படத்தின் காட்சிகள் மற்றும் திரைக்கதை குறித்து மணிவண்ணனின் தங்கை தனது பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். படத்தின் கதைக்கரு உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பின் போது மணிவண்ணனின் ஈடுபாடு மற்றும் வேகமான பணிச்சூழல் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார். அந்த காலத்திலேயே சவாலான முறையில் மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இப்படம், இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema