PulseNews
சினிமா

பெண்களுக்கு மாதம் ரூ 2,500...! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே இருந்து வந்தது. ஆனால், இதுதொடர்பாக தற்போது சாதகமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ரூ.2,500 உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம் இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். அரசின் நிதிநிலை மற்றும் அப்போதைய சூழலைப் பொறுத்தே ஒவ்வொரு திட்டத்தின் விரிவாக்கமும் அமையும் என அவரது விளக்கம் தெரிவிக்கிறது. இதையும் படிங்க: பெண்களின் பல நாள் எதிர்பார்ப்பு.... மகளிர் உரிமைத் தொகை உயர்வு உறுதியானது..! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!!! இதனால், தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உடனடியாக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அதே நேரத்தில், இதுவரை திட்டத்தில் பயனடையாத பெண்களுக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இணையதளம் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். திங்கள்கிழமை குறைதீர்ப்பு முகாமிலும் விண்ணப்பிக்கலாம் இணையவழி விண்ணப்பத்துடன், அரசு அலுவலகங்களில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் குறைதீர்ப்பு முகாம்களிலும் பொதுமக்கள் நேரடியாகச் சென்று மனு அளிக்கலாம். இதன் மூலம் தகுதியுள்ள புதிய விண்ணப்பதாரர்களை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையும் படிங்க: பெண்களே மாதம் ரூ.2500 பெற இது கட்டாயம்....! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பெண்களுக்கு மாதம் ரூ 2,500...! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!!
PulseNews சுருக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற பெண்களின் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது என்றும், அரசின் நிதிநிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப அவை படிப்படியாகவே செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதேவேளையில், இத்திட்டத்தில் இதுவரை சேராத தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இணையதளம் வாயிலாகவோ அல்லது திங்கட்கிழமைகளில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர்ப்பு முகாம்களுக்கு நேரில் சென்றோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema