Shamna Kasim: வயிற்றில் குழந்தையுடன் ஆடிய ஷாம்னா காசிம்.. ஜெயிலர் 2 பாடலின் கதை தெரியுமா?

ஜெயிலர் 2 பாடலில் ஆடும்போது தான் கர்ப்பமாக இருந்ததாக நடிகை ஷாம்னா காசிம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர் 2”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது. அலா போலேலோ என தொடங்கும் அந்த பாடலில் நடிகை ஷாம்னா காசிம் நடித்திருந்தார். தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் அறிமுகமான பூர்ணா தான் ஷாம்னா காசிமாக இதில் நடித்துள்ளார். இவர் நேர்காணல் ஒன்றில் ஜெயிலர் 2 பாடல் பற்றி பேசியுள்ளார்.

அதில், “நான் தெலுங்கில் குண்டூர் காரம் படத்தில் ஆடிய ஒரு பாடல் தான் ஜெயிலர் 2 பாடலுக்கு என்னை இழுத்து வந்தது என சொல்லலாம். இயக்குநர் நெல்சன் அந்த பாடலைப் பார்த்து விட்டு என்னை நடிக்க வைக்க விரும்பினார். நான் ஹீரோயினாக நடிக்கும் காலக்கட்டத்திலேயே தனிப் பாடல்களுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை எல்லாம் நான் ஏற்கவில்லை. எனினும் மகேஷ்பாபு பட பாட்டு வாய்ப்பு வரும்போது எனக்கு பிரசவம் நடந்து 5 மாதங்கள் தான் ஆகியிருந்தது. அதனால் எடை எல்லாம் கூடியது போல இருந்தேன். நான் முதலில் வேண்டாம் என மறுத்தேன். இருந்தாலும் முக பாவனை எல்லாம் வைத்து ஆடியதால் பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

நான் உருவ கேலி எல்லாம் செய்வார்கள் என உண்மையிலேயே பயந்தேன். நிறைய ஹீரோயின் விஷயத்தில் நான் பார்த்ததால் அப்படி தோன்றியது. எனினும் என் எண்ணத்தை அந்த பாடல் மாற்றியது. ரஜினியுடன் இப்படியான ஒரு வாய்ப்புக்கு அந்த பாட்டு இட்டுச் செல்லும் என கனவிலும் நினைக்கவில்லை. நெல்சன் என்னிடம் சொல்லும்போது நான் உடை பற்றி தான் கேட்டேன். ஜெயிலர் படத்தில் தமன்னா மாடர்ன் உடையில் ஆடினார். எனக்கு சேலை தான் உடை என சொல்லும்போது நிம்மதியாக இருந்தது.

ரிகர்சல் பார்க்கும்போது தான் இந்த முழுப்பாடலும் தான் எனக்கு என தெரிய வந்தது. முதலில் அந்த பாடலில் ஒரு சிறிய பகுதி என்று நினைத்தேன். ஜெயிலர் 2 பாடல் எடுக்கும்போது நான் கர்ப்பமாக இருந்தேன். இது எனக்கு தெரியாது. அந்த பாடல் முடிந்து அகண்டா 2 படத்திற்கு ஷூட்டிங் செல்லும்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. அதனால் என் குழந்தையை நான் ஜெயிலர் பேபி என்றே அழைக்கிறேன். என் கணவர், அம்மா எல்லாரும் இந்த பாடலைப் பார்த்து விட்டு மிகவும் சந்தோசப்பட்டார்கள்.

ஒருவேளை ரஜினியின் படையப்பா படத்தை 2ம் பாகம் எடுத்தால் அதில் நீலாம்பரி வேடம் ஏற்க எப்பவும் தயாராக இருக்கிறேன். நான் தமிழில் நடித்த படங்களில் என்னுடைய பேவரைட் என்றால் அது மிஷ்கினின் சவரக்கத்தி படம் தான்” என தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தின் 'அலா போலேலோ' பாடலில் நடிகை ஷாம்னா காசிம் நடனமாடியுள்ளார். அனிருத் இசையமைத்த இந்தப் பாடல் கடந்த வாரம் வெளியானது.
இந்த பாடலில் தான் நடனமாடியபோது தான் கர்ப்பமாக இருந்ததாக ஷாம்னா காசிம் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது ஷாம்னா காசிம் என்று அறியப்படுகிறார்.