காதலரை கரம் பிடித்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை: பிரம்மாண்டமாக நடந்த திருமணம்: வீடியோ வைரல்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். சமூகவலைதளங்களில் டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமாகி மாடலிங் துறையில் நுழைந்த வினுஷா தேவி, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரோஷ்னி விலகியதை தொடர்ந்து வினுஷாவுக்கு கண்ணம்மா கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் தனது திறமையை வெளிப்படுத்தி கண்ணம்மா கேரக்டருக்கு உயிர் கொடுத்திருந்தார். அதன்பிறகு பாரதி கண்ணம்மா 2, பனிவிழும் மலர் வனம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த வினுஷா தற்போது சுட்டும் விழி சுடரே சீரியலில் நடித்து வருகிறார். 2023-ம் ஆண்டு வெளியான என்.4 என்ற படத்திலும் நடித்துள்ள வினுஷா, மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார். அழகுப் போட்டிகள், போட்டோஷூட்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய தற்போது சின்னத்திரையின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். திரையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வரும் வினுஷா தேவி, நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் வினுஷா பகிர்ந்திருந்தார். அப்போது அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். View this post on Instagram A post shared by Vinusha Devi (@vinusha_devi) இந்நிலையில், வினுஷா தேவிக்கு, லிங்கேஸ்வரனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில், சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வினுஷா - லிங்கேஸ்வரன் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்மது வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியின் 'பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் பிரபலமான நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரை முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் திருமண நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ள நிலையில், அதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
டிக்டாக் வீடியோக்கள் மற்றும் மாடலிங் துறை மூலம் அறிமுகமான வினுஷா, ரோஷினி விலகியதைத் தொடர்ந்து 'பாரதி கண்ணம்மா' சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.