கேவலமான வசனங்கள்.. கடுப்பேற்றிய இயக்குநர்.. சர்தார் ஷூட்டிங்கில் கார்த்தி சந்தித்த பிரச்னைகள்!

சர்தார் படம் முதல் பாகம் உருவாகும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நடிகர் கார்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சர்தார் பாகம் 1

கடந்த 2022ம் ஆண்டு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த நிலையில், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்,சங்கி பாண்டே, லைலா, முனிஷ்காந்த் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த நிலையில் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் அசத்தியிருப்பார்.

சர்தார் பாகம் 2

இந்த நிலையில் 4 ஆண்டுகள் கழித்து சர்தார் படத்தின் 2ம் பாகம் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத்,ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இதனிடையே இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. அப்படியான ஒரு நேர்காணலில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், நடிகர்கள் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சர்தார் ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்

சர்தார் படத்தின் கதை சொல்லும்போது பல கெட்டப்புகளில் வருவீர்கள் என மித்ரன் சொன்னார். லுங்கி கட்டிய ஸ்பை என சொன்னதும் ஓகே என முடிவெடுத்தேன். இருந்தாலும் நிறைய கெட்டப் என சொன்னவுடன் நான் கொஞ்சம் பயந்தேன். கொஞ்ச நேரம் சென்றவுடன் பாதி படத்தில் நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்ட நபராக வருவீர்கள் என சொன்னார். நான் ஷாக்காகி விட்டேன். இருந்தாலும் இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது என நினைத்து விட்டு லுக் டெஸ்ட் எடுத்தோம். வயதான அந்த கெட்டப் வந்து விட்டது. எல்லாரும் சந்தோசப்பட்டோம். முதல்முறை கெட்டப் போடும்போது ஆர்வமாக இருக்கும். திரும்ப திரும்ப போடும்போது வரும் வேதனை சொல்ல முடியாது.

சர்தார் படத்தின் முதல் நாள் ஷுட்டிங்கில் பெரிய டயலாக் ஒன்றை கொடுத்தார். படித்துப் பார்த்தால் மொத்தமும் கேவலமாக இருக்கிறது. என்ன இது என கேட்டால் இதெல்லாம் படத்தில் வராது என மித்ரன் கூறுவார். ஷூட்டிங்கில் வயதான கெட்டப் போட்டால் 6 மணி நேரம் கழித்து தான் அந்த ஷாட் எடுக்க அழைப்பார். ஆனால் அந்த மேக்கப் 6 மணி நேரம் தான் தாங்கும். இதையெல்லாம் மீறி சர்தார் படத்தை ஒப்புக்கொள்ள காரணம், ஒருநாள் மித்ரன் வந்து கண் கலங்கினார். என்னவென்று கேட்டால் கல்யாணம் நிச்சயமாகியிருப்பதாக கூறினார். சரி சர்தார் 2 படம் ஆரம்பிக்கலாம் என சொன்னேன்.

இந்த படத்தில் மித்ரனின் மனைவியும் பணியாற்றியுள்ளார். 2 ஹீரோயின்கள் இருந்தும் ஒரு காதல் காட்சி கூட இல்லை. மித்ரன் முதலில் வில்லனுக்கு தான் கதை எழுதுவார். ஹீரோவைப் பற்றி கவலைப்படவே மாட்டார் என கார்த்தி தெரிவித்துள்ளார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 2022-ஆம் ஆண்டு வெளியான 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நடிகர் கார்த்தி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குநர் பயன்படுத்திய சில வசனங்கள் தனக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா மற்றும் முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர், ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.