PulseNews
சினிமா

"அண்ணா..எங்கள வுட்ருணா"- கதறும் சினிமா ரசிகர்கள்..! "டைரக்டர் நடிச்சு பாத்துருப்போம்.. டைரக்டரா நடிச்சு பாத்துருக்கீங்களா" - விஷால் BTS வீடியோஸ்

திரையரங்குகளில் வெளியான 'மகுடம்' திரைப்படம், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனால், தயவு செய்து விஷால் இனிமேல் இயக்க வேண்டாம், நடித்தால் மட்டும் போதும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். "நீங்க நோலன் தான்...நோலன் தான்" மகுடம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோக்கள் அடுத்தடுத்து வர தொடங்கின. அப்போது, க்ளைமேக்ஸ் சண்டை காட்சியில் விஷால் நடித்துக் கொண்டிருக்கும் போதே, கேமராமேனை நோக்கி ஓடி, இப்படி எடு, அப்படி எடு என சொல்வது போல இருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் நோலன் தான் என கலாய்த்து வந்தனர். "ஹே..ஹே..தெலுசு" மற்றொரு வீடியோவில், விஷால் டப்பிங் செய்யும்போது, 3 கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டுகிறேன் என பேசியதும் ட்ரோல் செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக.."ஹே..ஹே..இளையராஜா ஃபேன்சு" என விஷால், ஆடிக்கொண்டே பேசியதை யாரும் அவ்ளளவு எளிதாக மறந்து விடமுடியாது. இதுக்கு ஒரு முடிவு இல்லையா? இதோடு முடிந்தது என பலரும் நிம்மதி பெரு மூச்சு விட்டபோது, மகுடம் படத்தின் "மேக்கிங் வீடியோ இதோ உங்களுக்காக" என்பது போல அடுத்த வீடியோ வெளியானது. அதில், விஷால் சேரில் அமர்ந்து கொண்டு, கண்ணை மூடி சீனை விவரிப்பது, எதோ குழந்தை மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்ததோடு, அடடே நோலன் சார் நீங்களா? என்றும் வறுத்தெடுத்தனர். "அண்ணா..எங்கள வுட்ருணா" தற்போது, அடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விஷால் மானிட்டர் முன்பு நின்று, தனியாக பேசிக் கொள்வதும், கண்ணை மூடிக் கொண்டு எதோ மந்திரம் சொல்லுவது போலவும் அந்த வீடியோ இருந்தது.இதனை பார்த்த பலரும், நாங்கள் வேண்டும் என்றால், அந்த படத்தை கூட பார்த்து விடுகிறோம், ஆனால் தயவு செய்து இந்த மாதிரி வீடியோ போடாதீங்க, "அண்ணா..எங்கள வுட்ருணா" என கதற ஆரம்பித்துள்ளனர். வறுத்தெடுத்த ப்ளூ சட்டைமாறன்..! சினிமா விமர்சகரான ப்ளூ சட்டைமாறன், விஷாலின் அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, "டைரக்ட் பண்ணி நடிக்கறவங்களை பாத்துருக்கேன் ....ஆனா டைரக்ட் பண்ற மாதிரி நடிக்கறவரல இப்பதான் பாக்குறேன்" என கலாய்த்து பதிவிட்டார். BTS மட்டும் ரிலீஸ் பண்ணாதீங்க ஐயா..! அடுத்தடுத்து மகுடம் BTS வீடியோ வெளியாகிவருவதால், பொறுமை இழந்த ரசிகர்கள், நீங்க மகுடம் part 2 கூட எடுத்து ரிலீஸ் பண்ணிக்கோங்க, ஆனா இந்த மகுடம் BTS மட்டும் ரிலீஸ் பண்ணாதீங்க ஐயா..! என கையெடுத்து கும்பிடுவது போல மீம்ஸ் போட்டு வருகின்றனர். நடிகர்களின் திடீர் இயக்குனர் அவதாரம்..! இப்படி சில நடிகர்கள் நன்றாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென இயக்குனர் அவதாரம் எடுக்குறேன் என்ற பெயரில் படத்தை இயக்கி சொதப்பி வைத்துவிடுகிறார்கள். இதனை பார்க்கும் சினிமா ரசிகர்கள், "நாங்கள் எல்லாம் பாவம் இல்லையா?" என குமுறி வருகின்றனர். -தயாநிதி

Polimer News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"அண்ணா..எங்கள வுட்ருணா"- கதறும் சினிமா ரசிகர்கள்..! "டைரக்டர் நடிச்சு பாத்துருப்போம்.. டைரக்டரா நடிச்சு பாத்துருக்கீங்களா" - விஷால் BTS வீடியோஸ்
PulseNews சுருக்கம்

திரையரங்குகளில் வெளியான 'மகுடம்' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. விஷால் இனி இயக்குவதை விடுத்து, நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காணொலிகளில், விஷால் சண்டைக் காட்சிகளை இயக்கும் விதம் இடம்பெற்றுள்ளது. க்ளைமேக்ஸ் காட்சியில் அவர் கேமராமேனிடம் அறிவுறுத்தல்களை வழங்குவதைக் கண்ட இணையவாசிகள், அவரை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema