அரிய வகை குரங்குடன் வீடியோ; விக்ரமால் வெடித்த சர்ச்சை!
நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. விக்ரம் விளையாடிய குரங்கு தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை குரங்கான ‘லார் கிப்பான்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரங்கினம் அழிவின் விளிம்பில் இருக்கும் சுழலில் வெளிநாட்டில் இருந்து முறைப்படி இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதா? தனியார் இடத்தில் வளர்ப்பது சட்டப்பூர்வமானதா? வனத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற பல கேள்விகளை விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் பெரிதாக எழுந்த நிலையில் விக்ரம் அந்த வீடியோவை நீக்கி விட்டார். இருப்பினும் வைரலான வீடியோவை வைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த வீடியோ விக்ரமின் சம்பந்தி சி.கே. ரங்கநாதனின் இஞ்சம்பாக்கம் இல்லத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அங்கு தற்போது வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிய வகை குரங்கு ஒன்றுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்திருந்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் விளையாடியது தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ‘லார் கிப்பான்’ எனும் அழிவின் விளிம்பில் உள்ள குரங்கினம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த அரிய வகை குரங்கு வெளிநாட்டிலிருந்து சட்டப்பூர்வமாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதா மற்றும் இதனை தனியார் வளர்ப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.