வில்லி என்று தெரியாமலே நடித்து முடித்த ஐஸ்வர்யா ராய், கடைசி வரை மறைத்த இயக்குனர்: சூப்பர் ஹிட்டான க்ளாசிக் படம்
2000-ம் ஆண்டில் இந்தி சினிமாவில் இடம்பெற்ற மிகச் சிறப்பான திருப்பங்களில் ஒன்றாக 2004ஆம் ஆண்டு வெளியான நியோ-நாயர் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான ‘காக்கி’ (Khakee) படத்தின் திருப்பம் கருதப்படுகிறது. இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த கேரக்டர் தான் இந்த திருப்பத்திற்கு முக்கிய காரணம். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த மகாலட்சுமி கதாபாத்திரம், தன்னுடன் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகத் திரும்பி, தான் காதலிக்கும் அஜய் தேவ்கன் நடித்த யஷ்வந்த் அங்கரேவுடன் இணைந்து செயல்படுவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், படப்பிடிப்பின்போது நீண்ட காலமாக ஐஸ்வர்யா ராயிடம் அவரது கதாபாத்திரத்தின் முழுமையான கதைப் பயணத்தைத் தான் தெரிவிக்கவில்லை என்று படத்தின் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது குடும்ப நண்பர் என்றும், அவருடன் நெருக்கமான குடும்ப உறவு இருந்தபோதிலும், ‘காக்கி’ படத்தில் அவரது கதாபாத்திரம் எந்த பாதையில் பயணிக்கும் என்பதை ஆரம்பத்தில் அவரிடம் முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்று ராஜ்குமார் சந்தோஷி கூறியுள்ளார். கலாட்டா பிளஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் ராஜ்குமார் சந்தோஷி கூறுகையில், “ஒரு கதாநாயகி அல்லது கதாநாயகன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரத்தை நியாயப்படுத்துவதற்காக எப்போதும் ஒரு பின்னணிக் கதை இருக்கும். உதாரணமாக, அவருடைய தாய் கொடூரமானவராக இருந்திருக்கலாம். ஆனால் ‘காக்கி’ படத்தில் அப்படி எந்த நியாயப்படுத்தலும் கிடையாது. அவள் (ஐஸ்வர்யா நடித்த மகாலட்சுமி) கெட்டவள். அவ்வளவுதான். படத்தின் மற்ற முக்கிய நடிகர்களுக்குக்கூட மகாலட்சுமியின் உண்மையான நோக்கம் குறித்து படப்பிடிப்பு பாதியளவு முடியும் வரை தெரியாது. “படப்பிடிப்பு பாதியளவு முடிந்தபோது, அமிதாப் ஜி (அமிதாப் பச்சன்), அஜய் மற்றும் அக்ஷய் (குமார்) ஆகியோரிடம் அந்தக் கதையின் திருப்பத்தை விவரித்தேன். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ஐஸ்வர்யா எப்படி இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘அவருக்குத் தெரியாது. நான் அவரிடம் சொல்லவே இல்லை’ என்றேன். உடனே அவர்கள், ‘என்ன சொல்கிறீர்கள்? படம் நிறுத்தப்பட்டுவிடும்! ஐஸ்வர்யா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிடுவார்’ என்றார்கள். ஆனால், எப்படியிருந்தாலும் ஐஸ்வர்யா ராய் ‘காக்கி’ படத்தில் நடிப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ஐஸ்வர்யா தனது காலில் காயமடைந்தார். இதையடுத்து அவரைச் சந்திப்பதற்காக அவரது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்தேன். அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் என்னை மிகவும் விரும்புவார்கள். எனவே, அனைவரும் இருக்கும் இடத்தில் படத்தின் கதையைச் சொன்னேன். அப்போது அவரது பெற்றோர் முன்னிலையில் அவரது கதாபாத்திரத்தின் முழுக் கதையையும் அவரிடம் தெரிவித்தேன். அவரது பெற்றோர்களும் அந்தத் திருப்பம் மிகவும் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாகவும் இருப்பதாகக் கருதினர். குறிப்பாக, 2000களின் தொடக்கத்தில் ஒரு கதாநாயகிக்கு இத்தகைய கதாபாத்திரம் வழங்கப்பட்டது மிகவும் புதுமையானதாக இருந்தது. நான் ஆரம்பத்திலேயே ஏன் உன்னிடம் இதைச் சொல்லவில்லை என்றால், இது உன் மனதில் ஆழமாகப் பதிந்து, நீ அறியாமலேயே அதை வெளிப்படுத்திவிடுவாய் என்று நினைத்தேன். இது யாராலும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சித் திருப்பமாக இருந்தது. அவளுக்கே கூட தான் அந்தக் குழுவைக் காட்டிக்கொடுக்கப் போகிறோம் என்பது தெரியாது. ஏனென்றால், அவள் எப்போதும் அந்தக் குழுவின் ஒரு பகுதியாகவே தான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாள் என்றார். இருப்பினும், ஐஸ்வர்யா ராய் மகிழ்ச்சியுடன் ‘காக்கி’ படத்தில் நடித்தார். அவர் நடித்த மகாலட்சுமி கதாபாத்திரம், படத்தின் மிகப்பெரிய எதிர்பாராத திருப்பமாக அமைந்தது. ராஜ்குமார் சந்தோஷி மற்றும் ஸ்ரீதர் ராகவன் இணைந்து எழுதிய ‘காக்கி’ திரைப்படம், மகாராஷ்டிராவின் ஒரு சிறிய நகரத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவரை (அதுல் குல்கர்னி) மும்பைக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை குழுவின் பயணத்தை மையமாகக் கொண்டது. இந்தக் காவல்துறை குழுவில் டிசிபி அனந்த் குமார் ஸ்ரீவாஸ்தவ் (அமிதாப் பச்சன்), சீனியர் இன்ஸ்பெக்டர் சேகர் வர்மா (அக்ஷய் குமார்), முன்னாள் இன்ஸ்பெக்டர் யஷ்வந்த் அங்கரே மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அஷ்வின் குப்தே (துஷார் கபூர்) உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். மேலும், ஜெயப்ரதா, பிரகாஷ் ராஜ், தனுஜா, அஷ்வினி கால்சேகர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

2004-ம் ஆண்டு வெளியான ‘காக்கி’ (Khakee) திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த மகாலட்சுமி கதாபாத்திரம், இந்தி சினிமாவின் மிகச்சிறந்த திருப்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய இந்த நியோ-நாயர் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில், காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அதே கதாபாத்திரம் அவர்களுக்கு எதிராகத் திரும்புவது படத்தின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
தனது கதாபாத்திரம் ஒரு வில்லி என்று தெரியாமலேயே ஐஸ்வர்யா ராய் அந்தப் படத்தில் நடித்து முடித்தார். கடைசி வரை இந்த உண்மையை இயக்குனர் அவரிடமிருந்து மறைத்து வைத்திருந்த நிலையில், இந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.