PulseNews
சினிமா

பெத்லகேம் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய கமல்ஹாசன்

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'பெத்லகேம்' அல்லது 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் தற்போது தமிழிலும் திரைக்கு வந்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் படக்குழுவினர், சென்னை…

PulseNews ஆசிரியர் குழு2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பெத்லகேம் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய கமல்ஹாசன்

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'பெத்லகேம்' அல்லது 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் தற்போது தமிழிலும் திரைக்கு வந்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் படக்குழுவினர், சென்னையில் உள்ள அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

ஏற்கனவே இப்படத்தைப் பார்த்திருந்த உலகநாயகன் கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த முயற்சியைப் பாராட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தச் சந்திப்பின் போது, அவர்களுடன் அந்தச் சிறப்பான தருணத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, படக்குழுவினரை ஊக்கப்படுத்தும் விதமாகவும் கமல் பேசியுள்ளார்.

#cinema#editorial