சென்னை விமான நிலையத்தில் நடிகை லதா ராவுக்கு ஏற்பட்ட அவதி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
சென்னை விமான நிலையத்தில் தனக்குத் தேவையான நாப்கின் கிடைக்காமல் நடிகை லதா ராவ் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த அடிப்படை வசதி அங்கு கிடைக்காததால் ஏற்பட்ட அந்த சங்கடமான அனுபவத்தை அவர் தனது இன்…

சென்னை விமான நிலையத்தில் தனக்குத் தேவையான நாப்கின் கிடைக்காமல் நடிகை லதா ராவ் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த அடிப்படை வசதி அங்கு கிடைக்காததால் ஏற்பட்ட அந்த சங்கடமான அனுபவத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மாதவிடாய் காலத்தின் போது தான் சந்தித்த இந்த மோசமான சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, விமான நிலையத்தில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து பல்வேறு விவாதங்களும் எழுந்துள்ளன.
#cinema#editorial