இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கேக் வெட்ட வாள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தனது 51-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்த நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த நண்பர்களும் ரசிகர்களும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தனது 51-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்த நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த நண்பர்களும் ரசிகர்களும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவருக்குப் பிரம்மாண்டமான மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்தக் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டுவதற்கு வாள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த விழாவில் அவருக்கு 'வீரவாள்' பரிசாக வழங்கப்பட்ட காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பலரும் இந்த செயலை வியப்புடனும் விமர்சனத்துடனும் பார்த்து வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாள் பயன்படுத்தப்பட்ட இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. பொது இடத்தில் வாள் போன்ற ஆயுதங்களை இத்தகைய கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்தியது தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.