மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி இணையும் புதிய படம்: தலைப்பு மற்றும் முதல் தோற்றம் வெளியீடு
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'இஞ்சி வெல்லம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்திய படக்குழுவினர், படத்தின்…

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'இஞ்சி வெல்லம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்திய படக்குழுவினர், படத்தின் முதல் தோற்றத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, தற்போது மீண்டும் அதே இயக்குநரின் இயக்கத்தில் இந்தப் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#cinema#editorial