ரவி மோகன் - கெனிஷா பிரான்சிஸ் கூட்டணி: புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் இணையத்தில் வைரலாகும் வீடியோ
ரவி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன் ஆர்டினரி மேன்' திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு கெனிஷா இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக…
ரவி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன் ஆர்டினரி மேன்' திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு கெனிஷா இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் ரவி மோகனே எழுதியுள்ளார்.
இசையமைப்பு பணிகள் குறித்த அறிவிப்பு ஒருபுறம் இருக்க, நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் இருவரும் ஒரே அறையில் அருகருகே அமர்ந்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தக் காட்சியில் ரவி மோகன் புகைபிடித்துக் கொண்டிருப்பதும், அவர் பயன்படுத்திய சிகரெட்டை கெனிஷா அவரிடமிருந்து வாங்கிப் பயன்படுத்துவதும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.