பிக் பாஸ் சீசன் 10: அறிமுக மேடையிலேயே இருவர் வெளியேற்றம் - அதிரடியுடன் தொடங்கிய நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ், தனது 10-வது சீசனை இன்று மாலை 6 மணிக்குக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து, தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி…

விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ், தனது 10-வது சீசனை இன்று மாலை 6 மணிக்குக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து, தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். வழக்கத்திற்கு மாறாக, பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாகப் போட்டியாளர்கள் அறிமுக மேடையிலேயே வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்வின்போது, நடிகைகள் லஷ்மிபிரியா, ஷாத்திகா மற்றும் ஷப்னம் ஆகிய மூவரில் ஒருவர் மட்டுமே வீட்டிற்குள் நுழைய முடியும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதில் பார்வையாளர்களின் வாக்குகளின்படி, அதிக வாக்குகள் பெற்ற லஷ்மிபிரியா மட்டும் வீட்டிற்குள் நுழைந்தார். குறைந்த வாக்குகள் பெற்ற ஷாத்திகா மற்றும் ஷப்னம் ஆகியோர் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே மேடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த அதிரடித் திருப்பம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், சில ரசிகர்கள் இந்த நடைமுறை குறித்து விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
இந்த 10-வது சீசனில் 'பிக் பாஸ் காமன் மேன்' என்ற தேர்வு முறையின் மூலம் பொதுமக்களிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நபர்களும் போட்டியாளர்களாகக் களமிறங்குகின்றனர். மொத்தம் 100 நாட்கள் வெளி உலகத் தொடர்பு இன்றி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே அரங்கேறியுள்ள இத்தகைய அதிரடி மாற்றங்கள், ரசிகர்களிடையே இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.