இளையராஜாவின் இசையில் கார்த்திக் சுப்புராஜின் புதிய படம்: டோரதி அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படைப்பான டோரதி திரைப்படத்தின் பின்னணி இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரெட்ரோ திரைப்படத்தைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந…

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படைப்பான டோரதி திரைப்படத்தின் பின்னணி இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரெட்ரோ திரைப்படத்தைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இது அவரது 1540-வது படமாக அமைகிறது. இந்தத் திரைப்படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜும் இளையராஜாவும் முதன்முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.