சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைந்த சீமான்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூ…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் பிரத்யேக வீடியோ ஒன்றின் வாயிலாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தத் திரைப்படம், நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 26-வது திரைப்படமாக உருவாகும் இதில், பாக்யஸ்ரீ போஸ் கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முன்னதாக இதே இயக்குநரின் இயக்கத்தில் வெளியான 'தாய்க்கிழவி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் சீமான், ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்துள்ள அனுபவம் கொண்டவர். தற்போது அவர் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.