PulseNews
சினிமா

திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் முதல் பார்வை

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி. பியூலா மகிழ் தயாரிப்பில், இயக்குநர் சீயான் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'துரோகம் பழகு'. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை திரைப்பிரபலங்கள் வெளியிட்டன…

PulseNews ஆசிரியர் குழு2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் முதல் பார்வை

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி. பியூலா மகிழ் தயாரிப்பில், இயக்குநர் சீயான் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'துரோகம் பழகு'. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை திரைப்பிரபலங்கள் வெளியிட்டனர்.

இயக்குநர் எஸ்.வி. சேகர், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், ராம்கி மற்றும் நடிகைகள் பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா, அஷ்மிதா சிங் ஆகியோர் தங்கள் சமூக வலைதளப்பக்கங்கள் வாயிலாக இப்படத்தின் முதல் பார்வையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

பல்வேறு திரை பிரபலங்களால் வெளியிடப்பட்ட இந்த முதல் பார்வை போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

#cinema#editorial