போர் நிதி நெருக்கடி: உக்ரைனில் ஆபாசத் தொழிலைச் சட்டப்பூர்வமாக்கத் திட்டம்
தற்போது ரஷ்யாவுடனான போர் சூழலில் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் உக்ரைன், நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்காக ஆபாசத் திரைப்படத் தொழிலைச் சட்டப்பூர்வமாக்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதிபர்…

தற்போது ரஷ்யாவுடனான போர் சூழலில் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் உக்ரைன், நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்காக ஆபாசத் திரைப்படத் தொழிலைச் சட்டப்பூர்வமாக்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான அரசு, இத்துறையை முறைப்படுத்தப்பட்ட வரி அமைப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம் வருவாய் ஈட்டத் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் கிடைக்கப்பெறும் வரி வருவாயைக் கொண்டு நாட்டின் ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், போர் கால நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் வாயிலாக காவல்துறை பணிகளை எளிதாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இக்கட்டான சூழலில், இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வருமா என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளன. போருக்கான நிதி ஆதாரங்களை வலுப்படுத்த உக்ரைன் அரசு எடுத்து வரும் இந்த வித்தியாசமான முயற்சி பேசுபொருளாகியுள்ளது.