ரவி மோகன் - கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ இணையத்தில் வைரல்
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அறை முழுவதும் புகைமூட்டமாக இருக்க, கெனிஷாவு…

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அறை முழுவதும் புகைமூட்டமாக இருக்க, கெனிஷாவுடன் இணைந்து ரவி மோகன் கஞ்சா பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக முன்னதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக ரவி மோகன் தனது பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மீண்டும் இவர்களைப் பற்றிய விவாதங்களை இணையத்தில் பேசுபொருளாக்கியுள்ளது.
சர்ச்சைகளுக்கு மத்தியில், ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் 'ஆன் ஆர்டினரி மேன்' திரைப்படத்திற்கு கெனிஷா பிரான்சிஸ் இசையமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கான இசைப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.