விஜய் சேதுபதியின் 'பத்தா' திரைப்படம்: வெளியானது முதல் பாடல்
இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் லிஜோமோல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பத்தா'. இக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'செல்லமே மகளே'…

இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் லிஜோமோல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பத்தா'. இக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'செல்லமே மகளே' தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இப்பாடலை இசையமைப்பாளர் சாய் அபயங்கரே பாடியுள்ளார், கார்த்திக் நேதா இதற்கான வரிகளை எழுதியுள்ளார். ஏற்கனவே 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' மற்றும் 'சீதக்காதி' ஆகிய படங்களுக்குப் பிறகு பாலாஜி தரணீதரனுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில், விஜய் சேதுபதி சிகரெட் பிடித்தவாறு ரெட்ரோ தோற்றத்தில் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. அட்லீ வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ், ஸ்டார் ஸ்டூடியோ 18 மற்றும் ஏ சினி 1 ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.