PulseNews
சினிமா

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மோத ராத்திரி: தனுஷ் பாராட்டு

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில் குமார் நடிப்பில் உருவான 'மோத ராத்திரி' திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றப…

PulseNews ஆசிரியர் குழு2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மோத ராத்திரி: தனுஷ் பாராட்டு

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில் குமார் நடிப்பில் உருவான 'மோத ராத்திரி' திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படம் வெளியான இரண்டு வாரங்களிலேயே 5 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. படத்தின் இந்த சிறப்பான வெற்றியை முன்னணி நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். இந்த வெற்றி தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ள படக்குழுவினர், தங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழில் தான் நடித்த அனைத்து படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் நடிகை அனிஷ்மா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.

#cinema#editorial