PulseNews
சினிமா

’வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை’; சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா

பிரபல நடிகை சமந்தா சின்னத்திரை நிகழ்ச்சியில் களம் இறங்க உள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் பிரமாண்ட சமையல் நிகழ்ச்சி ’சோனி விழா’ மற்றும் ’சோனி லிவ்’ ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சமையல் நிகழ்ச்சியினை சமந்தா தொகுத்து வழங்குகிறார். இது குறித்து அவர் பேசுகையில், ”இதுவரை இது போன்ற நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றதில்லை. இருப்பினும், இந்த நிகழ்ச்சி என்னை வெகுவாக ஈர்த்தது. அதனால் தான் என்னால் இந்த நிகழ்ச்சியை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. இதுவரை நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இது முற்றிலும் வேறு வகையில் இருந்தது. இந்த ’செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப்’ எனும் சமையல் நிகழ்ச்சி அழகான நினைவுகளை உருவாக்கும். நமக்குப் பிடித்த பிரபலங்கள் சமையலறைக்குள் வந்து புதிய முயற்சிகளை எடுத்து நம்மை ஆச்சரியப்படுத்தி, உணர்வுப்பூர்வமாக ஆர்வத்துடன் போட்டிப் போடுவதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். விரைவில் தமிழில் அறிமுகமாகவுள்ள சோனி விழா சேனலில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகைகள் மற்றும் முன்னாள் நடிகைகள் பங்குபெற உள்ளனர். பிரபல நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக வெளியான தகவலையடுத்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
’வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை’; சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா
PulseNews சுருக்கம்

பிரபல நடிகை சமந்தா சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாக உள்ளார். முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான சமையல் நிகழ்ச்சி ஒன்றை அவர் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி சோனி விழா மற்றும் சோனி லிவ் தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தான் இதுவரை பங்கேற்றதில்லை என்று கூறியுள்ள சமந்தா, இந்த நிகழ்ச்சி தன்னை வெகுவாக ஈர்த்த காரணத்தினாலேயே, அந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema