விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு...
விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆக்சன் டிராமா படத்தில், கெளரி ஹெக்டே எனும் சக்திவாய்ந்த அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார்.
இந்தக் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக, தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ காட்சியைப் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பிரத்யேக முன்னோட்டக் காட்சி தற்போது பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.