“அவ பேரு சந்திரா டா...” - வெளியான ‘டி சி’ பட ஓடிடி அப்டேட்!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள ‘டிசி’ படம் கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வாமிகா கபி நாயகியாக நடித்திருக்க சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அனிருத்தின் இசையை பலரும் குறிப்பிடும் படி பாராட்டினர். இப்படம் தொடர்ந்து பெற்று வந்த வரவேற்பால் ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் நடிகரான அறிமுகமான முதல் படமே இந்த வசூலை எட்டியிருப்பது பலராலும் கவனிக்கப்பட்டது. மேலும் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு இப்படம் இரண்டாவது 100 கோடி படமாக அமைந்தது. முன்னதாக கேப்டன் மில்லர் அமைந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி செப்டம்பர் 4ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. திரையரங்கில் பெற்ற வரவேற்பை ஓடிடியிலும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான ‘டிசி’ திரைப்படம், கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் வாமிகா கபி நாயகியாகவும், சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
அனிருத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.