“நிறைய பேருக்கு அந்த குழப்பம் இருக்கு...” - உலா வரும் தகவல் குறித்து சூர்யா விளக்கம்
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜோதிகா பாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடரிலே அதிக கவனம் செலுத்தி வந்தார். குழந்தைகளும் மும்பையில் தான் பயின்று வந்தார்கள். இது குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய சூர்யா, சென்னையில் உள்ள வீட்டை விட சிறிய அளவிலான வீட்டில் தான் வசிக்கிறோம் எனப் பேசியிருந்தார். இந்த நிலையில் மும்பையில் செட்டிலாகவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் நடந்த சர்தார் 2 பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா, “நான் சென்னை தான். இங்கு தான் இருக்கிறேன். நிறைய பேருக்கு அந்த குழப்பம் இருக்கிறது. அங்கு தான் போயிட்டு போயிட்டு வருகிறேன்” என்றார். இதன் மூலம் அவரது மும்பை செட்டில் தகவலுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது. சூர்யா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்தார் 2 படம் கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்பை ஏஜெண்ட் வாழ்க்கையை வைத்து ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறிவிட்டதாக நீண்ட நாட்களாக தகவல்கள் பரவி வந்தன. ஜோதிகா இந்தி திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் அதிக கவனம் செலுத்தி வருவதாலும், குழந்தைகளின் படிப்பு மும்பையில் இருப்பதாலும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசிய சூர்யா, சென்னையில் உள்ள வீட்டை விட சிறிய வீட்டிலேயே தாங்கள் வசிப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது, தாங்கள் மும்பையில் நிரந்தரமாக குடியேறவில்லை என்பதை சூர்யா தெளிவாக விளக்கமளித்துள்ளார்.