PulseNews
சினிமா

அரை மணி நேரத்தில் 5 பாடல்கள் ரெடி, எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடிய ஹிட் பாட்டு: எந்த படத்திற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து, 80 வயதை கடந்த பிறகும் முன்னணி இசையமைப்பாளராக திகழும் இளையராஜா, பாடல் உருவாக்கிய விதம் குறித்து பலரும் அவ்வப்போது கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் வசந்த், அரை மணி நேரத்தில் 5 பாடல்களை கொடுத்ததாக கூறியுள்ளார். க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளனராக இருந்தவர் இளையராஜா. தொடர்ந்து 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், புதுமுக இயக்குனர்கள் பலரும் இவரை தேடி வர தொடங்கினர். அதேபோல், முன்னணி இயக்குனர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்த இளையராஜா, தனது இசை மற்றும் பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஹட்டாக்கியுள்ளார் என்று பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூறியுள்ளனர். தற்போது 80 வயதை கடந்துள்ள இளையராஜா இன்றும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில், பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவரது பாடல்கள் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் நிலையில், இவரின் நடவடிக்கைகள் அவ்வப்போது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம், இளையராஜாவின் சாதனைகள் குறித்து இயக்குனர்கள் பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் வசந்த் அளித்த ஒரு பேட்டியில், இளையராஜா சார் நடமாடும் இசை. அவர் ஆளே மியூசிக் தான். எனது முதல் படத்திற்கு அவர் தான் இசையமைத்தார். பாலச்சந்தர் சார் இயக்கிய சிந்து பைரவி (இளையராஜா பாலச்சந்தர் இணைந்த முதல் படம்) புன்னகை மன்னன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். அப்போது இளையராஜாவுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அதிகமாக பேசி இருக்கிறேன். என் முதல் படம் கேளடி கண்மணி படத்திற்கு அவர் தான் இசை. அப்போது அவர் ரொம்ப பிஸியாக இருந்தார். பல இயக்குனர்கள் அவரிடம் பாடல் வாங்குவதற்காக காத்திருப்பார்கள். இதனால் எனக்கு அவரின் கால்ஷீட் கொடுக்க தாமதம் ஆனது. ஒரு கட்டத்தில் எனக்கு கால்ஷீட் கிடைக்கும்போது என் தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு கிடைத்திருக்கிறது. எப்படியாவது பாடல்களை வாங்கிவிடு என்று சொன்னார். அதன்படி காலை 7.30 மணிக்கு முதல் கால்ஷீட் நான் தான். ஆனால் போன வேகத்தில் அரைமணி நேரத்தில் திரும்பி வந்துவிட்டேன். என்னை பார்த்து என் தயாரிப்பாளர் சோகமாகிவிட்டார். அப்போது அவர் ஒரு பாடலாவது போட்டீங்களா என்று கேட்க, நான் 5 பாடல்களும் முடிந்துவிட்டது என்று சொன்னேன். அவரின் திறமையை பார்த்து வாயடைத்து போய்தான் நான் பாடல்களை வாங்கி வந்தேன் என்று வசந்த் கூறியுள்ளார். இந்த படத்தில் கங்கை அமரன் எழுதிய ‘மண்ணில் இந்த காதல் அன்றி’ பாடலை எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடியது குறிப்பிடத்தக்கது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அரை மணி நேரத்தில் 5 பாடல்கள் ரெடி, எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடிய ஹிட் பாட்டு: எந்த படத்திற்கு தெரியுமா?
PulseNews சுருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜா, குறுகிய நேரத்தில் பாடல்களை உருவாக்கும் திறன் கொண்டவர் என்பதை இயக்குனர் வசந்த் பகிர்ந்துள்ளார். தனது முதல் படமான 'கேளடி கண்மணி'க்காக இசை வாங்குவதற்காகச் சென்றபோது, இளையராஜா வெறும் அரை மணி நேரத்தில் ஐந்து பாடல்களையும் முடித்துக் கொடுத்துத் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்படத்தில் கங்கை அமரன் வரிகளில் உருவான 'மண்ணில் இந்த காதல் அன்றி' என்ற பாடலை, எஸ்.பி.பி அவர்கள் மூச்சு விடாமல் பாடியது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இசையமைப்பாளர் இளையராஜாவின் அபாரமான இந்த இசைத்திறனைக் கண்டு தான் வியந்துபோனதாக இயக்குனர் வசந்த் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema