PulseNews
சினிமா

வழிக்கு வந்த சாமுண்டீஸ்வரி, விருந்து வைத்த பாட்டி; குடும்பங்கள் இணைகிறதா? கார்த்திகை தீபம் அப்டேட்

பாட்டி வைத்த விருந்து.. கோபத்தில் காத்திருக்கும் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், ரேவதிக்கு வாழ்த்து சொல்ல அனைவரும் வீட்டிற்கு வந்த நிலையில், அவர் கர்ப்பமாக இல்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடக்கவுள்ள சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில், அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, பாட்டி வந்திருக்கும் அனைவரையும் சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கூறி விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையில், சாமுண்டீஸ்வரியின் வீட்டில் எந்த அறையிலும் யாரும் இல்லாததையும், அனைத்து குழாய்களும் திறந்து கிடப்பதையும் சந்திரகலா கவனிக்கிறார். உடனே இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடம் சொல்லி, "அனைவரும் அங்கேதான் இருப்பார்கள், வாங்க போகலாம்" என கூறுகிறார். ஆனால், "நான் எதற்காக அங்கே வர வேண்டும்? எல்லாரும் இங்கே வரட்டும்" என்று சாமுண்டீஸ்வரி கோபத்துடன் காத்திருக்கிறார். மறுபுறம், பாட்டி ஏற்பாடு செய்த விருந்தை அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டிற்கு கேக் டெலிவரி வர, அது சுவாதியின் பிறந்தநாளுக்காக கார்த்திக் மற்றும் ரேவதி இணைந்து ஏற்பாடு செய்தது என்பது தெரிய வருகிறது. சுவாதி கேக் வெட்டி கொண்டாடிய பிறகு, ராஜராஜன் அனைவரையும் வீட்டிற்கு கிளம்புமாறு கூறுகிறார். "வீட்டில் யாரும் இல்லை என்பது சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும்" என்று எச்சரித்து அனைவரையும் அழைத்துச் செல்கிறார். வீட்டிற்கு திரும்பியதும், சாமுண்டீஸ்வரி தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது சுவாதி, "இன்று என்னுடைய பிறந்தநாள். அதை கூட நீங்கள் மறந்துவிட்டீர்கள். அதனால்தான் நாங்கள் எல்லாரும் அங்கே சென்றோம்" என்று கூறி சூழ்நிலையை சமாளிக்கிறார். இதனால் சாமுண்டீஸ்வரியும் அமைதியாகிறார். இவ்வாறான பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நகரவுள்ளது. அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வீட்டு வேலைகளில் அலப்பறை செய்யும் ஜீவா.. நடந்தது என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் வாகை சூடவா சீரியலில், நேற்றைய எபிசோடில் அப்பத்தா போட்ட கண்டிஷனுக்கு ஜீவா ஓகே சொல்லியிருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் ஜீவாவை வைத்து வீட்டிலுள்ளவர்கள் செமையாக வேலை வாங்கப் போகிறார்கள். முதல்ல ஜீவாவிடம் பாத்திரம் கழுவ சொல்ல, குவியலாக கிடக்கும் பாத்திரங்களை பார்த்து அவன் ஷாக்காகிறான். "இவ்வளவு பாத்திரத்தையா நான் கழுவணும்?" என்று புலம்பிக்கொண்டே வேலையை ஆரம்பிக்கிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் தேவி, "இன்னுமா பாத்திரம் கழுவிட்டு இருக்க?" என்று கேட்பதோடு, சரியாக கழுவவில்லை என்றும் குறை சொல்கிறாள். உடனே ஜீவா, "எப்படி கழுவணும்னு சொல்லிக் கொடுங்க" என்று சொல்ல, தேவி ஒரு தட்டை கழுவி காட்டுகிறாள். அதை தன்னுடைய அட்வான்டேஜாக எடுத்துக்கொள்ளும் ஜீவா, அடுத்தடுத்து ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி எப்படி கழுவணும் என்று கேட்டு, கடைசியில் மொத்த பாத்திரத்தையும் தேவியையே கழுவ வைக்கிறான். அதன்பிறகு வீட்டை துடைக்கும் வேலையில் இறங்கும் ஜீவாவை பாண்டி விடாமல் கலாய்க்கிறான். வேண்டுமென்றே ஆங்காங்கே டீயை ஊற்றி அவனுக்கு மேலும் வேலை வைக்க, கடுப்பான ஜீவா கயல் கொடுத்த மாப்பை வைத்து பாண்டியை அடிக்க துரத்துகிறான். அடுத்து துணி துவைக்கும் வேலை வர, கயல் வாஷிங் மெஷினில் போட்டு துவைக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். ஆனால் அப்பத்தா அதற்கு சம்மதிக்காமல், கையாலேயே துவைக்க வேண்டும் என்று கூறி ஜீவாவை மீண்டும் சிக்கலில் மாட்ட வைக்கிறார். இறுதியாக சட்னி அரைக்கும் போது மீனாட்சி ஜீவாவுக்கு உதவி செய்ய, இருவருக்கும் இடையே சிறிய உரசல் ஏற்படுகிறது. இதையெல்லாம் கயல் மறைந்திருந்து வீடியோவாக பதிவு செய்கிறாள். இப்படி ஜீவாவுக்கு அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடத்தப்பட்ட தனம்.. கையெழுத்து போட்ட கதிர், ரகுராம் செய்யப்போவது என்ன? - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி தனத்தை கடத்தி அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று, கடத்தப்பட்ட தனத்தை ஒரு ஃப்ரீசர் ரூமுக்குள் அடைத்து வைக்கிறார்கள். அதன்பிறகு புவனேஸ்வரி, மாயாவுக்கு வீடியோ கால் செய்து, தனம் தன்னிடம் இருப்பதாக சொல்கிறாள். மேலும், கதிர்தான் ஜீவா என்ற உண்மையை ஒப்புக்கொண்டு கதிர் சில ஆவணங்களில் கையெழுத்து போட வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாள். இதை கேட்ட மாயா உடனே கதிரை சந்தித்து விஷயத்தை சொல்ல, தனத்தை காப்பாத்தணும் என்பதற்காக எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட தயார் என்று கதிர் சொல்கிறான். இதையடுத்து இருவரும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் புவனேஸ்வரியை சந்திக்க கிளம்புகிறார்கள். மறுபக்கம், தனம் அடைக்கப்பட்டிருக்கும் ஃப்ரீசர் ரூமுக்குள் வரும் ரவுடி தனது செல்போனை தவறவிட்டு செல்கிறான். அந்த போன் தனத்தின் கையில் கிடைக்க, உடனே சீனுவுக்கு போன் செய்கிறாள். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த அழைப்பை மணி எடுக்கிறார். தனம் தான் கடத்தப்பட்டிருப்பதை சொல்ல, மணி உடனே இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் தெரிவிக்கிறார். இதனால் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். தனத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று ஒவ்வொரு ஏரியாவாக கரண்டை கட் செய்து, தனம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையில் கதிரும் மாயாவும் புவனேஸ்வரியை சந்திக்கிறார்கள். புவனேஸ்வரி கொடுத்த ஆவணங்களில் கதிர் கையெழுத்து போடுகிறான். ஆனால் தனம் இருக்கும் இடத்தை மட்டும் சொல்லாமல் புவனேஸ்வரி தொடர்ந்து நக்கல் அடிக்கிறாள். இதனால் கடுப்பாகும் மாயா, "இவங்க சொல்லப் போற மாதிரி தெரியல, நாமளே தனத்தை தேடலாம்" என்று கதிருடன் அங்கிருந்து கிளம்புகிறாள். மறுபக்கம், கடும் குளிரில் ஃப்ரீசர் ரூமுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் தனம், கையில் இருக்கும் செயினை பார்த்து கண்கலங்குகிறாள். "நீதான் ஜீவா என்ற உண்மை ரகுராமுக்கு தெரியணும். அவர் தொலைச்ச தங்கை பையன் நீதான் என்பதை அவர் தெரிஞ்சுக்கணும். நான் இல்லாம போனாலும் நீ சந்தோஷமா இருக்கணும்" என்று மனதிற்குள் நினைத்து உருகுகிறாள். இப்படியான நிலையில் தனத்தை குடும்பத்தினர் காப்பாற்றுவார்களா? கதிர் போட்ட கையெழுத்தால் என்ன பிரச்சனை வரப்போகிறது? ரகுராம் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார்? ன்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வழிக்கு வந்த சாமுண்டீஸ்வரி, விருந்து வைத்த பாட்டி; குடும்பங்கள் இணைகிறதா? கார்த்திகை தீபம் அப்டேட்
PulseNews சுருக்கம்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய பகுதியில், ரேவதி கர்ப்பமாக இல்லை என்ற உண்மை வெளிப்பட்ட நிலையில், இன்றைய எபிசோடில் விறுவிறுப்பான திருப்பங்கள் நடக்கவுள்ளன. அனைவரையும் ஒன்றாக அமர வைத்து, பாட்டி அனைவருக்கும் விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

பாட்டியின் இந்த விருந்து உபசரிப்பால், கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி மனம் மாறுவாரா அல்லது குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கம் ஏற்படுமா என்பது இன்றைய கதையின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema