குரங்கு வீடியோ பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் விக்ரம்: ‘நேரில் வந்து Details சொல்லணும்” கெடு விதித்த வனத்துறை
நடிகர் விக்ரம் அரிய வகை லார் கிப்பான் குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குரங்கு எங்கிருந்து வந்தது, அதற்கான உரிய ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், லார் கிப்பான் குரங்கு தொடர்பான முழு விவரங்கள் மற்றும் ஆவணங்களை மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரிய வகை லார் கிப்பான் குரங்குடன் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோவை நடிகர் விக்ரம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குரங்கு எங்கிருந்து வந்தது மற்றும் அதற்குரிய ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த குரங்கு தொடர்பான முழு விவரங்களையும் ஆவணங்களையும் வரும் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.