PulseNews
சினிமா

ஸ்ரீதேவியுடன் நான், இது மிக பழமையான படம்; திரையில் ஆச்சரியம் தரும் நடிப்பை புகழ்ந்த பிரபல இயக்குனர்

மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் கேரக்டர் குறித்து, திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்த பதிவில், 1987ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைகதை திரைப்படமான ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் ஸ்ரீதேவியுடன் முதன்முறையாக பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்தார். மேலும், கேமரா முன்பு இல்லாத நேரங்களில் தனது நட்சத்திர அந்தஸ்தையே ஸ்ரீதேவி கிட்டத்தட்ட மறுத்து வாழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: சேகர் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘மிஸ்டர் இந்தியா’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்தார். அதனுடன் அவர், “ஸ்ரீதேவியுடன் நான் இருக்கும் என்னிடம் உள்ள மிகப் பழமையான புகைப்படம் இது. அவரது முகம் ஒருபோதும் மாறவில்லை. ‘ஜோஷிலே’ படத்தில் இந்தப் புகைப்படத்தில் அவரது கண்களில் தெரிந்த அதே பிரகாசத்தை பின்னர் ‘மிஸ்டர் இந்தியா’ படத்திலும் காண முடிந்தது. உலகம் அவரை ஒரு நட்சத்திரமாக நினைவுகூருகிறது. ஆனால், அவரது பிறந்தநாளையொட்டி நான் நினைவுகூருவது, இயக்குநரின் சிறந்த நண்பராக இருந்த ஸ்ரீதேவியைத்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “ஸ்ரீதேவிக்கும் எனக்கும் இடையிலான அற்புதமான ஒத்துழைப்பு இல்லாமல் ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படம் சாத்தியமாகியிருக்காது. ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் நாங்கள் பணியாற்றியபோது, படப்பிடிப்பு தளத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் உற்சாகமும் எனக்குள் இருந்தது. ஏனென்றால், அன்று ஸ்ரீதேவி எந்த வகையில் நம்மை ஆச்சரியப்படுத்தப் போகிறார் என்பதை ஒருபோதும் முன்கூட்டியே கணிக்க முடியாது. அவர் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. கேமரா முன்பு இல்லாத நேரங்களில் ஸ்ரீதேவி ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருப்பார், ஆனால் கேமரா முன்பு வந்தவுடன் முற்றிலும் மாறுபட்ட ஆற்றலுடன் செயல்படுவார். கேமரா தன்னை நோக்கி இல்லாதபோது, அவர் தனது நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருப்பார். தனது நட்சத்திர அந்தஸ்தையே மறுத்த நிலையில் இருப்பது போல் தோன்றும். இன்றைய நடிகர்களைப் போல தனது கேரவனுக்குள் சென்று மறைந்துவிடவும் மாட்டார். ஆனால் கேமரா முன்பு வந்தவுடன், அங்கே ஒரு மாயாஜாலமே நிகழ்வது போல் இருக்கும். அது முற்றிலும் வேறுபட்ட ஸ்ரீதேவி. அவரது ஆற்றல் கேமராவை மட்டுமல்லாமல், படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரையும் சென்றடையும். அது மின்சாரம் பாய்வதைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். சில நேரங்களில், குறிப்பாக நடனக் காட்சிகளின்போது, கேமராவை நிறுத்துவதைக்கூட நாங்கள் மறந்துவிடுவோம். View this post on Instagram A post shared by Shekhar kapur (@shekharkapur) ஏனென்றால், ‘கட்’ என்று சொல்ல நானே மறந்துவிடுவேன். இனி ஸ்ரீதேவியைப் போன்ற ஒருவர் இருப்பாரா என்பது சந்தேகம்தான். அவர் நமக்குக் கிடைத்த ஒரு அற்புதமான பரிசு. நீங்கள் எங்கு இருந்தாலும், ஸ்ரீ... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என சேகர் கபூர் உருக்கமாக தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி தனது 54-வது வயதில் துபாயில் உயிரிழந்தார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குளியல் தொட்டியில் ஏற்பட்ட “எதிர்பாராத நீரில் மூழ்குதல்” காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஸ்ரீதேவியுடன் நான், இது மிக பழமையான படம்; திரையில் ஆச்சரியம் தரும் நடிப்பை புகழ்ந்த பிரபல இயக்குனர்
PulseNews சுருக்கம்

மறைந்த மூத்த நடிகை ஸ்ரீதேவியுடன் தான் பணியாற்றிய பழைய நினைவுகளை இயக்குனர் சேகர் கபூர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 1987-ம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

கேமராவுக்கு முன்னால் இருக்கும்போது மட்டும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தும் ஸ்ரீதேவி, மற்ற நேரங்களில் தனது நட்சத்திர அந்தஸ்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் மிகவும் எளிமையாக நடந்துகொண்டார் என்று சேகர் கபூர் பாராட்டியுள்ளார். திரையில் ஸ்ரீதேவியின் நடிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema