நூதன காதல் வெற்றி பெற்றதா? - ‘ராம் அண்ட் லீலா’ விமர்சனம்
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ வகை காதல் திரைப்படங்கள் வெளியாகி ஆச்சரியப்பட செய்திருக்கிறது. அந்த வகையில் இந்த முறை மனிதருக்கும் ஏலியனுக்குமான காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் ராம் அண்ட் லீலா. இந்த வித்தியாசமான கதை ரசிகர்களை எந்த அளவு ஈர்த்திருக்கிறது? நாயகன் ரியோ வெகு நாட்களாகியும் ஜோடி சேராமல் இருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். ஒரு கட்டத்தில் காதலிக்க பெண் தேடி ஊர் ஊராக திரிகிறார். பின்பு மின்சார ரயிலில் நாயகி வர்த்திகாவை சந்திக்கிறார். எதிர்பார்த்தது போலவே இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். இதற்கிடையே அந்த ரயிலில் இவர் அடிக்கடி பயணிப்பதால் அங்கு இவருக்கு ஒரு நல்ல நண்பர் கிடைக்கிறார். இருவரும் இரவு நேரத்தில் நண்பர்களாக வலம் வருகின்றனர். பகலில் வர்த்திகாவும் ரியோவும் காதலிக்கின்றனர். நாயகி வார்த்திகா மாலை 6:00 மணிக்கு மேல் நான் வெளியே வர மாட்டேன் என ஸ்ட்ரிட்டாக சொல்லி விடுகிறார். 6 மணிக்கு மேல் அப்படி என்னதான் விஷயம் இருக்கிறது என ரியோவுக்கு சந்தேகம் வர அவர் வீட்டிற்க்கே சென்று சந்தேகத்தை தீர்க்கிறார். அப்பொழுது அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் தெரிய வருகிறது. தான் காதலிக்கும் பெண் ஒரு ஏலியன் என்றும் அவர் ஆறு மணிக்கு மேல் ஆணாக மாறிவிடுவார் என்றும் அந்த ஆறு மணிக்கு மேல் மாறும் ஆண் இவரது நண்பர் என்றும் பல்வேறு அதிர்ச்சி விஷயங்கள் ரியோவுக்கு தெரிய வர அப்படியே அவர் மயங்கி விழுகிறார். பிறகு ஏதேதோ செய்து சமாதானம் ஆகி தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளலாம் என பல உண்மைகளை மறைத்து தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அவருக்கு அங்கு இரவு நேரத்தில் ஆணாக மாறும் தன் காதலியை ரியோவின் தங்கை காதலிக்க ஆரம்பிக்கிறார். இதனால் ரியோவின் காதலில் சிக்கல் ஏற்பட இறுதியில் ரியோ காதலி வர்த்திகாவை திருமணம் செய்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்தியாசமான காதல் கதையை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் இராமச்சந்திரன் கண்ணன் அதை வழக்கமான ரொமான்டிக் காமெடி ஜானரில் இயக்கி ரசிக்க வைத்திருக்கிறார். படம் ஆரம்பித்து அடுத்த காட்சிகள் யூகிக்கும்படி திரைக்கதை அமைத்திருந்தாலும் அவை ரசிக்கும்படி இருப்பது ஆறுதலாக இருக்கிறது. படம் முழுவதும் இதே போல் செல்லும் திரைப்படம் இரண்டாம் பாதியில் சற்று வேகத் தடைகள் நிறைந்து பின்பு இறுதி கட்டத்தில் மீண்டும் வேகம் எடுத்து குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும் படமாக முடிந்திருக்கிறது. ஏலியனாக இருக்கும் காதலி தான் பெண்ணாக உணர்ந்து பெண்ணாகவே மாறி காதலனை உருகி உருகி காதலிக்கும் படியான ஒரு கதையமைப்பை வைத்துக்கொண்டு கலகலப்பான முறையில் கதை கூறி இருக்கிறார் இயக்குநர். ஆங்காங்கே பல இடங்களில் அயற்சிகள் நிறைந்திருந்தாலும் சொல்ல வந்த விஷயம் கலகலப்பாக இருப்பதால் அவை மறக்கடிக்கப்படுகிறது. ரியோவுக்கு சினிமாவில் தற்போது ஏறுமுகம், அதை இந்த படத்திலும் அவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார். முடிந்தவரை இந்த மாதிரி காதல் நிறைந்த கலகலப்பான படங்களில் நடித்து கவனம் பெற்று வருகிறார். கதை தேர்விலும் சிறப்பாக செயல்பட்டு வருவது கூடுதல் சிறப்பு. நடிப்பில் இன்னமும் கூட முதிர்ச்சி தேவைப்படுகிறது. மற்றபடி கொடுத்தவேளையை நிறைவாக செய்திருக்கிறார். நாயகி வர்த்திகா ஏலியனுக்காகவே அளவெடுத்து செய்த முகம். அதேபோல் பெண்ணாக ரியோவை உருகி உருகி காதலிக்கும் இடத்திலும் சிறப்பான பங்களிப்பு கொடுத்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மாகாபா ஆனந்த் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ரியோவின் நண்பராக வரும் பாலாஜி தியாகராஜன் தயாளன் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மற்றபடி காத்தாடி ராமமூர்த்தி, தீபா வெங்கட், சேத்தன் உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக அழகாக இருக்கிறது. அங்கித் மேனன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. வித்தியாசமான கதையம்சத்தில் படம் உருவாகி இருக்கிறது. அதை வழக்கமான பாணியில் ரசிக்கும்படி கொடுத்திருப்பது சிறப்பு. இருந்தும் திரைக்கதையில் இன்னமும் வித்தியாசமாக ஏதேனும் முயற்சி செய்திருக்கலாம். அதேபோல் பல்வேறு வேகத்தடைகளை சரி செய்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பான படமாக அமைந்திருக்கும். ராம் அண்ட் லீலா - மனிதர் உணர்ந்து உள்ளே இது மனித காதல் அல்ல!

தமிழ் சினிமாவில் இதுவரை பல்வேறு காதல் கதைகள் வந்திருந்தாலும், மனிதனுக்கும் ஏலியனுக்கும் இடையிலான வித்தியாசமான காதலை மையமாக வைத்து 'ராம் அண்ட் லீலா' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகத் துணையின்றி மன உளைச்சலில் இருக்கும் நாயகன் ரியோ, காதலியைத் தேடி பல ஊர்களுக்குப் பயணம் செய்கிறார்.
இந்த பயணத்தின் ஒரு கட்டத்தில், மின்சார ரயிலில் வைத்து நாயகி வர்த்திகாவை அவர் சந்திக்கிறார். இந்தப் புதிய முயற்சி ரசிகர்களைக் கவர்ந்ததா மற்றும் இவர்களின் காதல் வெற்றி பெற்றதா என்பதை இந்தப் படம் விவரிக்கிறது.