மிஸ் பண்ணிட்டாத்தீங்க.... ITI-யில் சேரும் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 30,000 சம்பளம்... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு...!!!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கலந்தாய்வு அவகாசம் முடிந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று தங்களுக்கு விருப்பமான தொழிற்பிரிவில் சேரலாம். ஆகஸ்ட் 31 வரை நேரடி சேர்க்கை திறன்மிகு தொழிலாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவர்களில் சுமார் 95 சதவீதம் பேருக்கு முன்னணி தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒவ்வொரு நாளாக நடந்த கொடுமை.. காதலனுக்காக கண்டுகொள்ளாத கொடூர தாய்.! எனவே, ஏற்கனவே கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கல்விச் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று விருப்பமான பிரிவைத் தேர்வு செய்து சேர்க்கையை மேற்கொள்ளலாம். ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம் தொழிற்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் திறன் மற்றும் தொழில்துறைக்கு ஏற்ப மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் குறுகிய காலத்தில் தொழில்திறனை வளர்த்து வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் மாணவர்களுக்கு ஐடிஐ படிப்புகள் முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளன. மேலும், பயிற்சி காலத்திலேயே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தேர்வராக தேர்ச்சி பெற்று 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்களைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. அதன்பின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து, வேலை பார்த்துக்கொண்டே மேற்படிப்பைத் தொடரவும் முடியும். இலவச பயிற்சி, உதவித்தொகை மற்றும் கூடுதல் சலுகைகள் தொழிற்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் முழுமையாக இலவசம். இதனுடன் மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களின் கீழ் கூடுதலாக ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர, விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், தொழில்பயிற்சிக்குத் தேவையான கருவிகள் மற்றும் இலவச பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சில தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கு விடுதி வசதியும் உள்ளது. ITI பயிற்சி மூலம் தொழில்திறனை வளர்த்து வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் மாணவர்கள், ஆகஸ்ட் 31-க்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதையும் படிங்க: கோவை மூதாட்டி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்.!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கலந்தாய்வு காலம் முடிந்துவிட்ட நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நேரடி சேர்க்கைக்கான அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் நேரடியாக அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று, விரும்பிய தொழிற்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம். திறன்மிகு தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.