ஆக்ஷன் அதிரடியுடன் காதல்; ரசிக்க வைத்ததா? - ‘டி சி’ விமர்சனம்!
ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம். அதுவும் லோகேஷ் போன்றே ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் கதைகளுக்கு பேர் போன இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம். இப்படி வன்முறை விரும்பிகளான இரண்டு இயக்குநர்களும் இணைந்து ஒரு திரைப்படம் உருவாக்கினால் எப்படி இருக்கும்...? ரிட்டையர்டு போலீஸ் ஆபீஸர் தலைவாசல் விஜய் டீமில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கூலிப்படைகளாக இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் போலீசுக்கு சொந்தமான ஒரு ட்ரக்கை வழிமறித்து அதிலிருந்து ஆயுதங்களை திருடி சென்று விடுகின்றனர். இதனால் இவர்களை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது. அந்த சமயம் ஒரு லாட்ஜில் லோகேஷ் கனகராஜ் அன் டீம் பதுங்கி இருக்கின்றனர். அப்பொழுது லோகேஷுக்கு சஞ்சனா மீது ஈர்ப்பு ஏற்பட இவர்களை தேடி வந்த போலீஸ் சஞ்சனாவை கொலை செய்து விடுகின்றனர். இதனால் வெகுண்டு எழும் லோகேஷ் கனகராஜ் அங்கிருந்து தப்பித்து செல்ல மற்றொரு லாட்ஜில் சஞ்சனாவைப் போன்றே இருக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண் வாமிகாவை சந்திக்கிறார். வாமிகாவுக்கு லோகேஷ் மேலும் ஈர்ப்பு ஏற்பட இவர்கள் இருவரும் ஒரே அணியில் இணைகின்றனர். பிறகு இவர்களை தேடி வரும் போலீசை துரத்தி துரத்தி பழிவாங்க துடிக்கின்றனர். போலீசாரும் இவர்களை விடாமல் துரத்தி அடித்து துடிக்கின்றனர். இறுதியில் போலீசார் இவர்களை பிடித்தார்களா இல்லையா? லோகேஷ் கனகராஜ் அன்ட் டீம் போலீசாரை பழி வாங்கினார்களா இல்லையா? என்பதே இரத்தமும் சதையுமான ஆக்சன் கலந்த டிசி படத்தின் மீதி கதை. வழக்கம்போல் அருண் மாதேஸ்வரன் தனக்கு என்ன வருமோ அதையையே இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார். அதாவது ஆக்ஷன் நிறைந்த வன்முறை காட்சிகள் மூலம் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு ஆக்சன் படத்தை கொடுத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜூம் ஒரு ஆக்சன் விரும்பி என்பதாலேயே அவர் இந்த படத்தில் நாயகனாக மாற்றப்பட்டிருக்கிறார். இருவரும் இணைந்து நாம் எதிர்பார்த்தது போலவே முழுக்க முழுக்க ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ஷன் நிறைந்த வெட்டுக்குத்து நிரம்பிய துப்பாக்கி சத்தங்கள் காதை பிழைக்கும் ஒரு ஆக்சன் படத்தை கொடுத்திருக்கின்றனர். அது ரசிக்கும்படி இருந்ததா என்றால் ஆம் என்று சொல்ல வைத்திருக்கிறது. இந்த கால ஜென்-சி மட்டுமல்லாமல் இளைஞர்கள் மற்றும் ஆக்ஷன் விரும்பிகளையும் கவரும்படியான ஒரு திரைப்படத்தை கொடுத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் அருண் மாதேஸ்வரன். அவருக்கு இது கைவந்த கலை என்பதாலும் கூடவே லோகேஷூம் இணைந்து இருப்பதாலும் இத்திரைப்படத்தை நல்ல ரசிக்கும்படி கொடுத்திருக்கின்றனர். ஆனால் குடும்பங்களோடு சிறுவர்கள் குழந்தைகள் என அனைவரோடும் சேர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு வன்முறைகள் நிறைந்திருப்பது படத்திற்கு மைனஸ். அதேபோல் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்திருப்பதும் இன்னொரு மைனஸ். மற்றபடி மற்ற அனைத்து ரசிகர்களும் இத்திரைப்படத்தை கொண்டாடி தீர்ப்பதற்கு நிறை வாய்ப்புகள் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் முடி, தாடி என ரக்கடாக இருக்கிறார். அவருக்கு இது முதல் படம் என்பது போல் இல்லாமல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அதற்கு முத்தாய்ப்பாக அவருக்கு படத்தில் அதிக வசனங்கள் இல்லை முழுவதும் ஆக்ஷனிலேயே செய்து முடிக்கிறார். அவ்வப்போது வரும் காதல் காட்சிகளிலும் ஏதோ ஓரளவுக்கு சமாளித்து விடுகிறார். தனக்கு என்ன வருமோ அதை இப்படத்தில் கொடுத்து தப்பித்து விடுகிறார். சஞ்சனா மிக அழகாக இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். இவரைப் போலவே வாமிகாவும் அழகாக இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பின்னுகிறார். இவரும் லோகேஷும் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. லோகேஷின் நண்பர்களாக வரும் கிட்டி கதாபாத்திரம் மிகச் சிறப்பாக உருவாகியிருக்கிறது. அதில் நடித்த நடிகருக்கு வாழ்த்துக்கள். அதேபோல் உடன் நடித்த நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். லோகேஷின் அப்பாவாக வரும் கஸ்தூரிராஜா சில காட்சிகளிலேயே வந்தாலும் சிறப்பு. போலீசாக வரும் நடிகர் க்ரிஷ் தயாள் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இவரது துறுதுறுப்பான மிடுக்கான நடிப்பு மாஸ் கூட்டி இருக்கிறது. மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேளையை நிறைவாக செய்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் மற்றொரு நாயகன் யார் என்றால் இசையமைப்பாளர் அனிருத் தான். இவரது இசை இந்தப் படத்தை வேறு ஒரு லெவலுக்கு எலிவேட் செய்து படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது. குறிப்பாக இவரது பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் மாஸ் கூட்டி தியேட்டரை கைதட்டல்களாலும் விசில்களாலும் பறக்க விடுகிறது. இவரது மாஸ் எலிவேஷன் தரும் இசை படத்தை வெற்றி பெற செய்து கரை சேர்க்க உதவி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் முகேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி ரெட்ரோ ஸ்டைலில் ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார். ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருடன் போலீஸ் ஆட்டத்தையே இந்த படத்திலும் ஆடி இருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். ஆனால் காட்சிகளுக்குள் வரும் திரைக்கதை பல இடங்களில் பிரஷ்ஷாகவும் யூஸ்ஃபுல்லாகவும் இருப்பது படத்திற்கு பக்கபலமாக அமைந்து படத்தை வெற்றி பெற செய்து இருக்கிறது. அதற்கு முத்தாய்ப்பாக அனிருத் இசையும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. அதுவே இந்த படத்தை பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருப்பது படத்திற்கு பெரிய பிளஸ். குழந்தைகள் குடும்பங்கள் தாண்டி மற்ற அனைத்து ரசிகர்களுக்கும் ரசிக்கும்படியான படமாகவே டிசி அமைந்திருக்கிறது. டிசி - ஆக்சன் திருவிழா!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘டி சி’. ஓய்வுபெற்ற காவல் அதிகாரி தலைவாசல் விஜய் தலைமையிலான குழுவில் இருக்கும் லோகேஷ் மற்றும் நண்பர்கள், போலீஸ் ட்ர்க்கில் இருந்த ஆயுதங்களைத் திருடுகின்றனர். இதன்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லோகேஷின் காதலி சஞ்சனா உயிரிழக்க, பழிவாங்கத் துடிக்கும் லோகேஷ், சஞ்சனாவைப் போலவே இருக்கும் வாமிகாவைச் சந்திக்கிறார். இவர்களது கூட்டணி போலீசாரை எதிர்த்துப் போராடும் ஆக்ஷன் காட்சிகளே மீதிக் கதையாகும்.
இப்படம் வன்முறை நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அனிருத்தின் அதிரடியான பின்னணி இசையால் ரசிகர்களைக் கவர்கிறது. லோகேஷ் கனகராஜின் ரக்கடான நடிப்பு, ஒளிப்பதிவாளர் முகேஷின் ரெட்ரோ ஸ்டைல் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. அதேசமயம் அதிகப்படியான வன்முறை மற்றும் ‘ஏ’ சான்றிதழ் குடும்பங்களுடன் பார்ப்பதற்குத் தடையாக அமைந்தாலும், ஆக்ஷன் விரும்பிகள் கொண்டாடும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.