“100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்...” - வியப்புடன் பாராட்டிய அட்லீ!
சுயாதீன பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். இருப்பினும் சுயாதீன பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை ‘கட்சி சேர’, ‘ஆசைக்கூட’, ‘விழி வீசுற’, ‘சித்திர புதிரி’ மற்றும் ‘பவழமல்லி’ ஆகிய பாடல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக ‘ரதிமா’ எனும் பாடல் சமீபத்தில் வெளியிட்டார். இதில் அவரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸும் நடனமாடியிருந்தனர். இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் திரை பிரபலங்களின் பாராட்டுகளையும் பெறத் தொடங்கியுள்ளது. நடிகர் தனுஷ் அழகான பாடல் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இயக்குநர் அட்லீ இப்பாடலை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பாராட்டு குறிப்பில், “இந்த ரதிமா பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது வெளியானதிலிருந்து 100 முறைக்கு மேலாக கேட்டுவிட்டேன். ஒவ்வொரு முறையும் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. சாய்... உன்னை நினைக்கும் போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நீ இசையமைக்கும் விதம், பாடலை வெளிப்படுத்தும் பாணி மற்றும் ஒவ்வொரு புதிய பாடல்களிலும் உன்னையே மிஞ்சும் வகையில் செயல்படும் விதம் ஆகியவை உண்மையிலேயே சிறப்பானது. இப்போது 'ரதிமா' தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாக்கியஸ்ரீ போர்ஸ் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார். நான் சாய் அபயங்கரின் தீவிர ரசிகன். உனது அடுத்த படைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடர்ந்து உயரே பறந்து சாதித்துக்கொண்டே இரு. உன் வெற்றியில் மனதார மகிழ்ச்சியடைகிறேன். மிக நேர்த்தியாக உருவாக்கிய இந்த ரதிமா பாடல் குழுவினருக்கு வாழ்த்துகள். எனக்குப் பிடித்த பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் அருமை. முழு குழுவிற்கும் மற்றும் 'திங்க் மியூசிக்' நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்” என்றுள்ளார். அல்லு அர்ஜூன் நடிப்பில் அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுயாதீன பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான கலைஞர், சூர்யா, தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே 'கட்சி சேர', 'ஆசைக்கூட', 'விழி வீசுற', 'சித்திர புதிரி' மற்றும் 'பவழமல்லி' ஆகிய பாடல்களை அவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
தற்போது 'ரதிமா' எனும் புதிய பாடலை வெளியிட்டுள்ள அவர், அதில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸுடன் இணைந்து நடனமாடியுள்ளார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடலை 100 முறைக்கும் மேல் கேட்டுவிட்டதாகக் குறிப்பிட்டு, இயக்குநர் அட்லீ வியப்புடன் பாராட்டியுள்ளார்.