PulseNews
சினிமா

மச்சான பாத்தீங்களா... டெஸ்ட்காக எழுதி, சூப்பர் ஹிட்டாக பாட்டு: அன்னக்கிளி சுவாரஸ்ய சம்பவம்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இசைராஜா என்று அழைக்கப்படும் இளையராஜா, தனது இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும் அவரது முதல் படமாக அன்னக்கிளி படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல் குறித்து கங்கை அமரன் பேசியுள்ளார். கடந்த 1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. அதன் பிறகு, இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். அவரது பாடல்கள் காலம் கடந்து பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனையை நிகழ்த்தி இருக்கும் அவர், இசையின் ராஜாவாக வலம் வருகிறார். இசையின் ராஜா, இசைக் கடவுள், இசை அரசன் என ரசிகர்கள் பல்வேறு பெயர்களில் அவரை அன்புடன் அழைத்து வருகிறார்கள். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில், அவருக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 80 வயதை கடந்த இளையராஜா இன்றைக்கும் இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதே சமயம், பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் இளையராஜா, அதில் தனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த பல பாடல்களை கூறி வருகிறார். இத்தனை படங்களுன்னு இசையமைத்திருந்தாலும் அவரது முதல் படமான அன்னக்கிளி எப்போதும் ஸ்பெஷல் தான். இந்த படத்தை பற்றி இளையராஜா பல மேடைகளில் பேசியுள்ளார். அதேபோல் அவரது சகோதரரும் இயக்குனருமான கங்கை அமரனும் அவ்வப்போது தனது நினைவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அன்னக்கிளி படத்தில் இடம் பெற்ற மச்சான பாத்தீங்களா என்ற பாடல் உருவானது குறித்து ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அன்னக்கிளி படத்தில் வரும் மச்சானை பார்த்தீங்களா பாடல், நான் டெஸ்ட்க்காக எழுதியது. அதையே மெயின் பாடலாக வைத்துவிட்டார். இந்த பாடலை முதலில் நான் எடழுதும்போது மச்சானை பார்த்தீங்களா மதியான நேரத்திலே, மதியான நேரம் மாந்தோப்பு ஓரம் வந்தாரை காணலையே என்று எழுதினேன். அதன்பிறகு இந்த பாடலில் சிறு சிறு வார்த்தைகளை மாற்றி படத்தில் வைத்ததாக கங்கை அமரன் கூறியுள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மச்சான பாத்தீங்களா... டெஸ்ட்காக எழுதி, சூப்பர் ஹிட்டாக பாட்டு: அன்னக்கிளி சுவாரஸ்ய சம்பவம்
PulseNews சுருக்கம்

இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான 'அன்னக்கிளி' திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை கங்கை அமரன் பகிர்ந்துள்ளார். 1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள், ஒரு சோதனையாக எழுதப்பட்டு பின்னர் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, காலப்போக்கில் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். அவர் இசையமைத்த பாடல்கள் பல தசாப்தங்கள் கடந்தும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema