PulseNews
சினிமா

எம்.எஸ்.வியுடன் நெருக்கிய நட்பு, ஆனா கண்ணதாசனுக்கு பிடித்த இசை அமைப்பாளர் இவர் தான்: யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்தவர் தான் கண்ணதாசன். காதல், சோகம், அன்பு, பாசம், கருணை, என அனைத்து வகையான உணர்ச்சிகளுக்கு தனித் தனியாக பாடல்கள் கொடுத்துள்ள கண்ணதாசன், பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதியிருந்தாலும் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் இவர் தான் என்று ஒருவரை குறிப்பிட்டுள்ளார். அவர் யார் தெரியுமா? தமிழ் திரை இசை உலகில் கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி ஒரு பொற்காலம். இவர்களுக்கு இடையேயான பிணைப்பையும், கண்ணதாசனின் கவித்துவ மேதமையையும் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும். இவர்கள் பாடல் எழுதும் போது நடந்த உரையாடல்கள், செல்ல சண்டைகள் குறித்து அவ்வப்போது பழைய வீடியோக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். கண்ணதாசன் எம்.எஸ்.வி இடையே இவ்வளவு நெருக்கம் இருந்தாலும் கண்ணதாசனுக்கு பிடித்த இயைமைப்பாளர் கே.வி.மகாதேவன் தான். இது குறித்து தனது கட்டுரையில் எழுதியுள்ள கண்ணதாசன், இந்த இசைப் பணியில் என்னால் மறக்க முடியாத இசையமைப்பாளர், நான் அன்புடன் "மாமா" என்றழைக்கும் கே. வி. மகாதேவன் அவர்கள். சங்க காலத்து வார்த்தைகளை அப்படியே போட்டாலும், மகிழ்ச்சியோடு, அர்த்தம் புரிந்து அதற்கும் இசையமைத்தவர், அவர். அவருடன் உதவியாளராக உள்ள புகழேந்தி தமிழறிவு மிக்கவர். செழுமையான வார்த்தைகளைக் கேட்கும்போது, அவற்றின் நயம் முறிந்து விடாமல் இசையமைப்பார். இரண்டு வடமொழி வார்த்தைகள். அவற்றை முதலில் சொல்லி இருந்தால், இசையமைப்பாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்" என்பதே அந்தப் பாடல். என்னுடைய பாடல்களில் சுமார் ஆயிரம் பாடல்களுக்கு மாமா இசையமைத்திருக்கிறார். அதில் 800 பாடல்களுக்கு மேல் நான் எழுதியபிறகே இசையமைக்கப்பட்டது.. 'வானம்பாடி'யில் வரும், 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்'; 'ஏட்டில் எழுதி வைத்தேன்'; 'தூக்கணாங் குருவிக் கூடு': 'ஊமைப் பெண் ஒரு கனவு கண்டால்' என அனைத்து பாடல்களுமே எழுதி இசையமைக்கப்பட்டது. 'இரத்தத் திலகம் படத்தில் வரும், 'பசுமை நிறைந்த நினைவுகளே'; 'பனி படர்ந்த மலையின் மேலே' ஆகிய பாடல்களும் அதே பாணியில் உருவானது தான். இப்படி சொல்வதானால் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பாடல்கள் தம்பி விஸ்வநாதனிடமும் ஏராளமாக உண்டு என்றாலும், பல நேரங்களில் அழகான தமிழ் வார்த்தைகளை அவன் ஒப்புக்கொள்வதில்லை. ஆயினும் அந்தக் காலங்களில் எழுதியவற்றைப் படித்துப் பார்த்தால், பெரும்பாலானவை பள்ளிக்கூடங்களில் பாடமாக வைப்பதற்குத் தகுதியுள்ளவையாகத் தோன்றுகின்றன என்று கண்ணதாசன் கூறியுள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எம்.எஸ்.வியுடன் நெருக்கிய நட்பு, ஆனா கண்ணதாசனுக்கு பிடித்த இசை அமைப்பாளர் இவர் தான்: யார் தெரியுமா?
PulseNews சுருக்கம்

தமிழ் சினிமாவில் காதல், சோகம் மற்றும் அன்பு உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் தனது பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தியவர் கவியரசர் கண்ணதாசன். பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருந்தாலும், தனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார் என்பதை அவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையிலான கூட்டணி திரையிசையில் ஒரு பொற்காலமாகவே கருதப்படுகிறது. இத்தகைய நெருக்கமான நட்பையும் பிணைப்பையும் கொண்டிருந்த போதிலும், கண்ணதாசன் தமக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளராகக் குறிப்பிட்ட அந்த நபர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema