இந்த படத்தில் கார்த்தி நடிப்பது ரொம்ப தப்பு; முரளி தான் சரியாக இருப்பார்: தயாரிப்பாளரிடம் நேரடியாக சொன்ன விக்ரமன்
தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வரும் கார்த்திக் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் இப்போது அவர் படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நிலையில், அவர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவரை தனது படத்திற்கு வேண்டாம் என்று நிராகரித்துள்ளார் இயக்குனர் விக்ரமன். தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான திரைப்படங்கள் எடுப்பதில் இயக்குநர் விக்ரமன் முதன்மையானவர். குறிப்பாக, அவர் இயக்கிய முதல் படமான 'புது வசந்தம்' படம், மாறுபட்ட கதையசம் கொண்டதாக அமைந்தது. அதுவரை வந்த தமிழ் படங்களில் ஆண் - பெண் நட்பு குறித்து பேசப்படாத நிலையில், அதன் மற்றொரு கோணத்தை படம்பிடித்து காண்பித்தவர் இயக்குநர் விக்ரமன். அவர் இயக்கிய, 'வானத்தை போல', சூர்யவம்சம்', பூவே உனக்காக' போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால், விகடன் பத்திரிகையில் தனது திரைப்படங்களுக்கு குறைவான விமர்சன மதிப்பெண்களே கிடைத்தது என்று இயக்குநர் விக்ரமன் தனது ஆதங்கத்தை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தி இருந்தார். அதில், "ஏறத்தாழ, 50 ஆண்டுகளுக்கும் மேலாக விகடனின் வாசகராக நான் இருக்கிறேன். விகடன் விமர்சனத்தில் 50 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். என்னுடைய 'புது வசந்தம்' திரைப்படத்தை பார்த்த அனைவரும், இத்திரைப்படம் கண்டிப்பாக விகடனில் 50 மதிப்பெண்களை தாண்டும் என்று கூறினார்கள். 60 மதிப்பெண்கள் பெற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தெரிவித்தனர். ஆனால், அந்த திரைப்படத்திற்கு 46 மதிப்பெண்கள் தான் விகடனில் கிடைத்தது என்று கூறியிருந்தார். இதனிடையே புது வசந்தம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆர்.பிசௌந்தி, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, இந்த கதை அருமையாக இருக்கிறது. ஆனால் இதில் கார்த்திக் நடித்தால் சூப்பராக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் இதை கேட்ட விக்ரமன், கார்த்திக் ரொமான்டிக் ஹீரோ, இப்போது தான் வருஷம் 16 திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மௌனராகம் படத்தில் கூட அவர் ஒரு ரொமான்டிக் ஹீரோவாக தான் வந்திருப்பார். அதனால் இந்த படத்திற்கு அவர் செட் ஆகமாட்டார். பல படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்த அவருக்கு இந்த படத்தில் ஹீரோயினுடன் நட்புடன் பழகும் கேரக்டர் என்றால், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த கதைக்கு முரளி தான் சரியாக இருப்பார் என்று கூறியுள்ளார். அதன்பிறகே முரளி இந்த படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். முரளி, ராஜா, சித்தாரா, ஆனந்த் பாபு, சார்ளி ஆகியோர் நடிப்பில் வெளியான புது வசந்தம் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் விக்ரமன். அவர் தனது இயக்கத்தில் உருவான ஒரு படத்தில் நடிக்க கார்த்தியை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றும், அவருக்குப் பதிலாக முரளியை நடிக்க வைப்பதே சரியாக இருக்கும் என்றும் தயாரிப்பாளரிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் பல வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தாலும், அவரது உச்சக்கட்ட காலத்திலேயே விக்ரமன் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது முதல் படமான 'புது வசந்தம்' மூலம் மாறுபட்ட கதைக்களத்தை விக்ரமன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.