PulseNews
சினிமா

ரூ.256 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் துரை தயாநிதி? வீடியோ ஆதாரங்களை அடுக்கும் சிபிஐ..!!!

ரூ.256 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து ஏற்கனவே மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது புதுச்சேரி ஜிப்மரில் விரிவான பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவக் குழுவையும் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. உடல்நல பாதிப்புகளை காரணம் காட்டி விலக்கு கோரிக்கை பக்கவாதம் மற்றும் ஞாபக மறதி உள்ளிட்ட தீவிர உடல், மனநல பாதிப்புகள் இருப்பதால் துரை தயாநிதியால் வழக்கை எதிர்கொள்ள முடியாது என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஆதரிக்கும் வகையில் மருத்துவச் சான்றிதழும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது கிடைக்கும்? வேளாங்கண்ணி பாதயாத்திரையில் அமைச்சர் மரிய வில்சன் சொன்ன முக்கிய தகவல்....!!! ஐபிஎல் போட்டி, வாக்களித்த வீடியோவை காட்டி எதிர்ப்பு ஆனால், இந்தக் கோரிக்கைக்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. துரை தயாநிதி சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தது, தேர்தலில் வாக்களித்தது தொடர்பான வீடியோ ஆதாரங்களை அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். உடல்நிலை தொடர்பான அவரது தரப்பு வாதங்களை இந்த காட்சிகள் கேள்விக்குள்ளாக்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜிப்மரில் சிறப்பு மருத்துவக் குழு பரிசோதனை இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, துரை தயாநிதியின் தற்போதைய உடல் மற்றும் மனநிலையை துல்லியமாக மதிப்பிட முடிவு செய்தார். இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை மனநல மருத்துவர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து, விரிவான பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் படிங்க: கச்சிதமாக காய் நகர்த்தும் CM விஜய்! டேபிளில் இருக்கும் அந்த 3 ஃபைல்கள்... இடைத்தேர்தல் தேதி அறிவித்ததும் வெளிவரும் ரகசியம்! கசிந்த சீக்ரெட்...!!!

Tamil Spark14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரூ.256 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் துரை தயாநிதி? வீடியோ ஆதாரங்களை அடுக்கும் சிபிஐ..!!!
PulseNews சுருக்கம்

ரூ.256 கோடி மதிப்பிலான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தனது உடல்நல பாதிப்புகளைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் விலக்கு கோரியிருந்த நிலையில், அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே துரை தயாநிதியின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்த சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ள சிறப்பு மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema