PulseNews
சினிமா

கிசுகிசு பயத்தில் 90s ஹீரோயினி மோகினி செய்த அந்த காரியம்! சிவாஜியுடன் நடித்தது.... கருவறைக்குள் சென்ற உணர்வு! சினிமா வாழ்க்கையை ஓப்பனாகப் பேசிய நடிகை மோகினி!!!

90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மோகினி. ‘ஈரமான ரோஜாவே’ உள்ளிட்ட படங்களால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்த அவர், தற்போது திரைப்பயணத்தை வெகுவாகக் குறைத்துள்ளார். சித்ரா லட்சுமணனுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், தனது சினிமா வாழ்க்கையின் பல சுவாரஸ்யமான பக்கங்களை மனம் திறந்து பேசியுள்ளார். ‘நடிக்க வரும்’ என்ற நம்பிக்கை வந்தது எப்படி? சினிமாவுக்குள் வந்த ஆரம்ப காலத்தில் நடிப்பின் மீது தனக்கு பெரிய நம்பிக்கை இல்லை என்று மோகினி தெரிவித்துள்ளார். எதிரில் யாருமே இல்லாதபோதும் கடவுள் இருப்பதாக நினைத்து பரதநாட்டியம் ஆடுவது போலத்தான் தனக்கும் நடிப்பு இருந்ததாக அவர் கூறியுள்ளார். இதையும் படிங்க: இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா? விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா..! பின்ணனியில் இருக்கும் அதிரடி திருப்பம்...!!! ஆரம்பகால படங்களில் சுமார் 43 கிலோ எடையுடன் திரையில் தன்னைப் பார்த்த பிறகுதான், ‘நமக்கும் நடிக்க வருகிறது’ என்ற நம்பிக்கை தனக்குள் உருவானதாக மோகினி நினைவு கூர்ந்தார். அதே நேரத்தில், தனது வளர்ச்சிக்கு திரைக்குப் பின்னால் உழைத்த இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்பே முக்கிய காரணம் என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். சிவாஜியுடன் நடித்தது... கருவறைக்குள் சென்ற உணர்வு! திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய அனுபவங்களையும் மோகினி பகிர்ந்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் நடித்ததை, கூட்டம் நிறைந்த கோவிலின் கருவறைக்குள் தனியாகச் செல்வது போன்ற உணர்வாக அவர் வர்ணித்தார். படப்பிடிப்புத் தளத்தில் சிவாஜி கடைப்பிடித்த நேரக் கட்டுப்பாடு தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியதாகவும் தெரிவித்தார். பழம்பெரும் நடிகர் பாலையா கூறிய அறிவுரையையும் மோகினி மறக்காமல் நினைவு கூர்ந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், டிக்கெட் வாங்கி படம் பார்க்க வரும் ரசிகர்களுக்காக கேமரா முன்பு சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே அந்த அறிவுரை. அந்த வார்த்தைகள் தனது திரைப்பயணத்தில் முக்கியமான பாடமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அக்ஷய் குமாரை பார்த்து பயந்த மோகினி! பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் பணியாற்றிய அனுபவமும் பேட்டியில் இடம்பெற்றது. அவரது சாகசத் திறனும் உடல் வளைவுத் தன்மையும் ஆரம்பத்தில் தன்னை பயமுறுத்தியதாக கூறிய மோகினி, தனிப்பட்ட முறையில் அவர் மிகச் சிறந்த பண்பாளர் என்றும் பாராட்டினார். நடிகர் திலீப் தனது நெருங்கிய நண்பராக இருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ள மோகினி, கார்த்திக், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தமிழில் அவர் கடைசியாக ‘குற்றப்பத்திரிகை’ படத்தில் நடித்தார். அதிக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதில் தனக்கு விருப்பம் இருந்ததில்லை என்றும் மோகினி வெளிப்படையாக கூறியுள்ளார். தேவையற்ற கிசுகிசுக்களில் சிக்கிவிடக் கூடாது என்பதால் படப்பிடிப்புத் தளங்களில் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் பிஸியான கதாநாயகியாக இருந்த மோகினி , தற்போது திரைப்படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்துக்கொண்டாலும், 90களின் ரசிகர்கள் மனதில் அவரது படங்களும் கதாபாத்திரங்களும் தொடர்ந்து நினைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதையும் படிங்க: BREAKING: விசாரணை முடிந்த பின்.... சங்கீதா சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஷாக்கில் CM விஜய்..... யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்....!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கிசுகிசு பயத்தில் 90s ஹீரோயினி மோகினி செய்த அந்த காரியம்! சிவாஜியுடன் நடித்தது.... கருவறைக்குள் சென்ற உணர்வு! சினிமா வாழ்க்கையை ஓப்பனாகப் பேசிய நடிகை மோகினி!!!
PulseNews சுருக்கம்

90-களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த மோகினி, சித்ரா லட்சுமணனுடனான நேர்காணலில் தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். ஆரம்பத்தில் நடிப்பின் மீது பெரிய நம்பிக்கை இல்லாத தான், திரையில் தனது 43 கிலோ எடையுள்ள தோற்றத்தைப் பார்த்த பின்னரே நடிப்பின் மீது நம்பிக்கை கொண்டதாக அவர் குறிப்பிட்டார். கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்க படப்பிடிப்பு தளங்களில் அமைதியாக இருந்த அவர், கவர்ச்சியான வேடங்களைத் தவிர்த்து வந்ததையும் வெளிப்படுத்தினார்.

நடிகர் திலகம் சிவாஜியுடன் பணியாற்றிய அனுபவத்தை, கோயில் கருவறைக்குள் செல்வது போன்ற உணர்வாக அவர் வர்ணித்தார். மேலும், படப்பிடிப்புத் தளத்தில் சிவாஜியின் நேரக்கட்டுப்பாடும், பாலையா வழங்கிய அறிவுரைகளும் தனது வாழ்க்கையில் பெரிய பாடங்களாக இருந்ததாக அவர் நினைவு கூர்ந்தார். அக்ஷய் குமார், திலீப், மம்முட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள மோகினி, தற்போது திரைப்பயணத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டாலும், தனது நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema