PulseNews
சினிமா

போயஸ் கார்டன் வீடு முதல் மீடியா கவனம் வரை; மோகன் சர்மா சொன்னது அனைத்தும் பொய்யா? நடிகை குட்டி பத்மினி விளக்கம்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகர் மோகன் சர்மா, கடந்த 1975-ம் ஆண்டு நடிகை லட்சுமியை திருமணம் செய்துகொண்டார். 5 வருடங்கள் கழித்து 1980-ம் ஆண்டு இவர்கள் பிரிந்த நிலையில், தற்போது வீடு, உள்ளிட்ட சொத்துக்களை இழந்த மோகன் சர்மா, தான் முதியோர் இல்லத்தில் இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் இணையத்தில் பரவியது. இதனால் அவருக்கு உதவ திரைத்துறையினர் சிலர் முயற்சிகளை முன்னெடுத்தனர். இதனிடையே அவரது வீடு அவரை விட்டு போகவில்லை. அவர் தான் விற்றுவிட்டார் என்று நடிகை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு நடிகை குட்டி பத்மினி அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். ஆனால் என்னை மட்டும் உள்ளே விட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் முழுமையான தகவல்கள் உள்ளது. “அந்த காலத்தில் மீடியா இவ்வளவு பரவலாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு இருந்தது, இப்போது இருப்பதைப் போல ஒவ்வொரு இடத்திலும் செல்போன் கேமராக்களும், சமூக ஊடகங்களும் கிடையாது. அதனால் அப்போது நடந்த பல விஷயங்கள் மக்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம். போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது அந்த வீடு வங்கிக் கடன் உள்ளிட்ட நிதிச் சுமையில் இருந்தது, கடனைத் தீர்த்த பின்னர் மீதமுள்ள தொகை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மருத்துவர் அந்த வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டை விற்பதாக எனக்கு கூட மெசேஜ் போட்டிருந்தார், அதன்பிறகு ஒரு மருத்துவர் அந்த வீட்டை வாங்கினார். வீட்டை வாங்கிய பின்னர், அந்த வீட்டை காலி செய்ய மோகன் சர்மா ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளார். அந்த வாக்குறுதியை நம்பி வீட்டை வாங்கிய மருத்துவர் ஒரு மாத கால அவகாசம் வழங்கினார். ஆனால் 2 ஆண்டுகள் ஆன பின்னரும் அவர் வீட்டை காலி செய்யவில்லை. மேலும், வீட்டை காலி செய்யாமல், வீட்டை விற்றதையும் யாரிடமும் சொல்லாமல், மற்றொருவரிடம், கடனாக பணம் பெற்று அவரை இந்த வீட்டில் குடி வைத்துவிட்டு இவர் வெளியேறிவிட்டார். வீட்டை வாங்கிய மருத்துவர் திடீரென வந்து பார்த்தபோது புதிதாக குடி வந்தவருக்கும் இவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதன்பிறகு வழக்கறிஞர் வந்து பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார் என்று குட்டி பத்மினி கூறியுள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
போயஸ் கார்டன் வீடு முதல் மீடியா கவனம் வரை; மோகன் சர்மா சொன்னது அனைத்தும் பொய்யா? நடிகை குட்டி பத்மினி விளக்கம்
PulseNews சுருக்கம்

தமிழ் நடிகர் மோகன் சர்மா முதியோர் இல்லத்தில் இருப்பதாக பரவிய தகவல்கள் குறித்து நடிகை குட்டி பத்மினி விளக்கம் அளித்துள்ளார். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டை மோகன் சர்மா விற்றுவிட்டதாகவும், அவர் வறுமையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக வீட்டை விற்பனை செய்த மோகன் சர்மா, அதை வாங்கிய மருத்துவரிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் வீட்டை காலி செய்யாமல், பணத்தைப் பெற்றுக்கொண்டு மற்றொருவரை அங்கு குடியேற்றியதுடன் தானும் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் குட்டி பத்மினி இந்தத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema